சிறுக சிறுக சேர்த்து வைத்து, கஷ்டப்பட்டு வாங்கிய முதல் கார்! மொத்த குடும்பமும் ஷோரூமில்!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து புதியதாக குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Kushaq Facelift) கார் கடந்த மார்ச் 21ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.10.69 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் டெலிவிரிகள் (Deliveries) இந்தியா முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரை கஸ்டமர் ஒருவர் டெலிவிரி பெறும் முதல் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்கோடா காராக குஷாக் விளங்குகிறது. இதனாலேயே குஷாக் காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறக்காமல் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அப்கிரேட் செய்துவிடுகிறது. அந்த வகையில் ஃபேஸ்லிஃப்டிற்கு அப்கிரேட் செய்யப்பட்ட புதிய குஷாக் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

skoda kushaq facelift suv car delivery video

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், காரின் முன் மற்றும் பின்பக்கங்களிலும், உட்புற கேபினிலும் மட்டுமே சில அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கிளாசிக்+, சிக்னெச்சர், ஸ்போர்ட்லைன், பிரெஸ்டீஜ் மற்றும் மோன்டே கார்லோ என ஐந்து விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார்களை டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரும் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு, டெலிவிரிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரை வாங்கிய இளைஞர் ஒருவர், வேலை கிடைத்ததும் கார் வாங்குவேன் என சிறுவனாக இருந்த போது ஆசைப்பட்டு தற்போது அதனை நிஜமாக்கி உள்ளார். இதனாலேயே, இந்த உணர்வு பூர்வமிக்க தருணத்தை குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார். ஸ்கோடா டீலர்ஷிப் ஷோரூமுக்கு குடும்பத்துடன் சென்று பிராண்ட்-நியூ குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரை டெலிவிரி பெற்றுள்ளார்.

skoda kushaq facelift suv car delivery video

மனைவி, குழந்தை உள்பட குடும்பத்துடன் ஷோரூமிலேயே கேக் வெட்டி, காருக்கு பூஜை போட்டு டெலிவிரி பெற்றுள்ளனர். அப்டேட் செய்யப்பட்ட குஷாக் கார் மொத்தம் 8 விதமான நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில், இந்த இளைஞர் வாங்கியிருப்பது அடர் நீல நிறத்திலான குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் ஆகும்.

இவரது இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவின்படி பார்க்கும்போது, இது இவரது முதல் கார் ஆகும். இவரது பதிவை இதுவரையில் மட்டுமே 48 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் பார்வையிட்டுள்ளனர். புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரை பொறுத்தவரையில், இதன் முன்பக்கம் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெரிய அளவிலான கிரில்லை புதிய குஷாக் பெற்றுள்ளது.

காருக்கு கவர்ச்சி அளிக்கும் வகையில், கிரில்லின் முழு அகலத்திற்கும் பட்டையாக விளக்கு செல்கிறது. இது எல்இடி டிஆர்எல்-கள் இரண்டையும் இணைக்கிறது. புதிய குஷாக்கில் புதிய மாற்றமாக சதுர வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி, புதிய குஷாக்கின் பக்கவாட்டு பகுதி ஆனது பெருமளவு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடிற்கு முந்தைய குஷாக் காரையே ஒத்துக் காணப்படுகிறது.

புதிய குஷாக்கின் விலை குறைவான வேரியண்ட்கள் 16 இன்ச் அலாய் சக்கரங்கள் உடனும், டாப் வேரியண்ட்கள் 17 இன்ச் அலாய் சக்கரங்கள் உடனும் கிடைக்கின்றன. புதிய குஷாக்கின் பின்பகுதி தற்போது ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், ஒளிரக்கூடிய ஸ்கோடா எழுத்துகள் மற்றும் டிசைன் மாற்றப்பட்ட பம்பரை கொண்டுள்ளது. இவற்றுடன், ஒட்டுமொத்தமாக குஷாக் காரின் நீளம் 4மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், பின்பக்க பூட்ஸ்பேஸ் பகுதியின் கொள்ளளவும் 100 லிட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 491 லிட்டர்களாக கொண்டுவரப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் காரையே ஸ்கோடா குஷாக் போன்ற ஸ்டைலிஷான எஸ்யூவி காரை வாங்குவது நம்மில் பலருக்கு கனவாகும். அதனை இந்த இளைஞர் நினைவாக்கி உள்ளார். இந்தியாவிற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஸ்கோடா குஷாக் காரை இந்திய இளைஞர் ஒருவர் தனது முதல் காராக வாங்கியிருப்பது ஸ்கோடா ஆட்டோ ஒரு கார் நிறுவனமாக வெற்றி பெற்றுள்ளதை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 31, 2026, 15:54 [IST]
English summary
Skoda kushaq facelift suv first delivery video in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+