கொரியாகாரனை துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட விட்ட இந்திய நிறுவனங்கள்! யார் எடத்துல வந்து யார் சீன் போட்றது?
இந்திய சந்தையில் முன்பெல்லாம் கார் விற்பனையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகிய 2 நிறுவனங்கள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதாவது மிகவும் அதிகமான கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகிதான் முதல் இடத்தை பிடிக்கும்.
அதை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் 2வது இடத்தை பிடிக்கும். பெரும்பாலான மாதங்களில் இதுதான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தை இந்திய நிறுவனங்களான டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகியவை விற்பனையில் வீழ்த்த தொடங்கி விட்டன.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் கூட ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகமான கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்களின் பட்டியல் (Top 10 Car Brands March 2026) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
1,72,919 கார்களை விற்பனை செய்து, இந்த பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த பட்டியலில் 2வது இடம் டாடா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. 67,268 கார்களை விற்பனை செய்திருப்பதன் மூலம், டாடா நிறுவனம் இந்த பட்டியலில் 2வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த வரிசையில் 61,032 கார்களை விற்பனை செய்திருப்பதன் மூலமாக மஹிந்திரா நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு 4வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் வெறும் 48,623 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இந்த பட்டியலில் 27,987 கார்கள் விற்பனையுடன் கியா (Kia) நிறுவனம் 5வது இடத்தையும், 27,479 கார்கள் விற்பனையுடன் டொயோட்டா (Toyota) 6வது இடத்தையும் பிடித்துள்ளன. அதை தொடர்ந்து 7வது இடத்தை ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் (Skoda Volkswagen) குழுமம் பிடித்துள்ளது. அவை 8,676 கார்களை விற்பனை செய்துள்ளன.
இந்த வரிசையில் 6,233 கார்கள் விற்பனையுடன் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் 8வது இடத்தையும், 5,507 கார்கள் விற்பனையுடன் ஹோண்டா (Honda) நிறுவனம் 9வது இடத்தையும், 3,588 கார்கள் விற்பனையுடன் ரெனால்ட் (Renault) 10வது மற்றும் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் சமீப காலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. டாடா பன்ச் (Tata Punch), புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) மற்றும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் (Mahindra Thar) போன்ற கார்களை எல்லாம் இதற்கு உதாரணமாக கூற முடியும்.
குறிப்பாக எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில், டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள், ஹூண்டாய் நிறுவனத்தை காட்டிலும் பல படி மேலே சென்று விட்டன. உதாரணத்திற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா நிறுவனம் 5,558 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. அதேபோல் மஹிந்திரா நிறுவனம் 2,913 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.
ஆனால் ஹூண்டாய் நிறுவனமோ வெறும் 304 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களை, முன்னோக்கி செலுத்தி கொண்டுள்ளன. எதிர்காலத்திலும் சந்தையில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் ஆதிக்கம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








