மூட்டைப்பூச்சியை ஒழிக்கப்போய் காரை கொளுத்திய அமெரிக்கர்!

By Saravana

அமெரிக்காவின், நியூயார்க் அருகிலுள்ள லாங் ஐலேண்ட் தீவு பகுதியில், மூட்டைப்பூச்சியை ஒழிப்பதற்காக ஒருவர் மேற்கொண்ட முயற்சி விபரீதத்தில் முடிந்தது. இந்த சம்பவத்தில் மூன்று கார்கள் தீக்கிரையானது.

லாங் ஐலேண்ட் பகுதியிலுள்ள பிரிட்ஜ்ஹேம்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்காட் கெமெரி(44). இவர் கியா சோல் வாடகை கார் ஒன்றை சொந்த உபயோகத்திற்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். அந்த காரில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகம் இருந்துள்ளது. மூட்டைப் பூச்சியை ஒழிக்க அவர் மேற்கொண்ட முயற்சிதான் விபரீதத்தில் முடிந்தது.

மூட்டைப் பூச்சி தொல்லை

மூட்டைப் பூச்சி தொல்லை

ஸ்காட் பயன்படுத்திய வாடகை காரின் இருக்கைகளில் மூட்டைப்பூச்சிகள் அதிகம் இருந்துள்ளது. அவற்றை அழிப்பதற்காக ஆல்கஹாலை வாங்கி இருக்கைகளின் மீது தடவியுள்ளார்.

விபரீதம்

விபரீதம்

அடுத்து காரில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு சிகரெட் பிடிக்க லைட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரினுள் தடவப்பட்டிருந்த ஆல்கஹால் தீப்பற்றிக்கொண்டு எரியத் துவங்கியது.

 ஸ்காட் காயம்

ஸ்காட் காயம்

காருக்குள் தீப்பற்றியவுடன் விழுந்தடித்து காரிலிருந்து வெளியேறியுள்ளார் ஸ்காட். இருப்பினும், அவரது உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் ஸ்காட்டை மருத்துமனையில் சேர்த்தனர்.அவருக்கு இரண்டாம் டிகிரி தீக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

கார்கள் சேதம்

கார்கள் சேதம்

ஸ்காட் வாடகைக்கு எடுத்து வந்த கியா சோல் கார் தீப்பற்றி எரிந்ததோடு அல்லாமல், அந்த காருக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த நாசமாயின.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

போலீசார் விசாரித்தபோது ஸ்காட்டின் நண்பர் ஒருவர்தான் மூட்டைப்பூச்சியை ஒழிக்க ஆல்கஹாலை தடவுமாறு ஐடியா கொடுத்தாராம். அந்த ஐடியாவில் தவறில்லை. ஸ்காட் கவனக்குறைவாக சிகரெட் பற்ற வைத்ததுதான் இப்போது இந்த சேதாரங்களுக்கு காரணம்.

 கிரிமினல் நடவடிக்கை?

கிரிமினல் நடவடிக்கை?

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் கூறுகையில், ஸ்காட் மீது கிரிமினல் நடவடிக்கை எதுவும் இருக்காது என்று கூறினர்.

முதல் வழி

முதல் வழி

ஆல்கஹாலை பயன்படுத்தி அழிப்பதும் ஒரு வழிதான். ஆனால், கவனம் தேவை. அதுதவிர்த்து, மூட்டைப்பூச்சி தொல்லை ஏற்படாமல் தவிர்க்க காரை சுத்தமாக வைத்துக்கொள்வது முதல் வழி. இருக்கை கவர்கள், மிதியடிகள், க்ளவ்பாக்ஸ்களை சுத்தமாக இருக்க வேண்டும்.

வாக்கம் க்ளீனர் உதவி

வாக்கம் க்ளீனர் உதவி

வாக்கம் க்ளீனரை வைத்து அவ்வப்போது சுத்தப்படுத்துவதும் அவசியம்.

சூரிய வெப்பம்

சூரிய வெப்பம்

இருக்கை கவர்கள், மிதியடிகள், தரை விரிப்புகளை வெயிலில் நன்றாக காய வைத்து பயன்படுத்தவும்.

ஸ்பிரே

ஸ்பிரே

மூட்டைப்பூச்சிகளை ஒழிப்பதற்கு பூச்சிக் கொல்லி ஸ்பிரேயை பயன்படுத்தலாம். ஆனால், அவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஸ்பிரேயை அடித்து விட்டு உடனடியாக பயணிப்பதை தவிர்க்கவும்.

நீராவி முறை

நீராவி முறை

நீராவி முறையில் காருக்குள் மூட்டைப்பூச்சிகளை அழிப்பது ஒருமுறையாகும். இடுக்குகளில் மறைந்திருக்கும் மூட்டைப்பூச்சிகளை அழிப்பதற்கு இதுவும் ஒருவழியாகும்.

பேபி பவுடர்

பேபி பவுடர்

மூட்டைப்பூச்சியை ஒழிப்பதற்கு பேபி பவுடரை பயன்படுத்துவதும் ஒரு உபாயம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Man Set Rental Car Ablaze While Trying to Kill Bed Bugs in US.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X