உலகின் முதல் சோலார் பேனல் சாலை: பிரான்ஸ் நாட்டில் திறப்பு

Written By:

சூரிய மின்சக்தி மூலமாக மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உலகின் முதல் சோலார் பேனல் சாலை பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைசச்ர் சீகோலின் ராயல் இந்த சாலையை பொது பயன்பாட்டுக்கு அர்பணித்து வைத்தார். புதுமையான இந்த சாலை குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி மாகாணத்தில் உள்ள டூராவிர் பெர்ஷே என்ற சிறு கிராமத்தில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு 2,800 மீட்டர் சதுர பரப்பில் இந்த சாலையில் சூரிய மின் உற்பத்தி செய்யும் தகடுகளுடன் சாலையானது அமைக்கப்பட்டுள்ளது.

3,400 பேர் வசிக்கும் பெர்ஷே கிராமத்தின் தெரு விளக்குகளுக்கு இந்த சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் சூரிய மின்தகடுகள் மூலமாக கிடைக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படும்.

இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு 2,000 வாகனங்கள் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கிராமத்தில் போதிய சூரிய ஒளி கிடைக்கும் என்பதால், ஆண்டு முழுவதும் எந்த பிரச்னையும் இல்லாமல் சூரிய ஒளி மின்சாரம் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த சாலையில் பதிக்கப்பட்டு இருக்கும் சூரிய மின்தகடுகள் மூலமாக 767 kWh மின்சாரத்தை நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலமா, அந்த கிராமத்தின் அனைத்து தெருவிளக்குகளுக்கு போதுமானதாக இருக்கும்.

இந்த சாலையில் வாகனங்கள் செல்வதால் ஏற்படும் தேய்மானத்தை குறைக்கும் விதத்தில் 5 அடுக்கு சிலிக்கான் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாலைகள் சோதனை முயற்சியாகவே அமைக்கப்பட்டு வருகிறது.

 

அடுத்த 5 ஆண்டுகளில் இதுபோன்று 1,000 கிமீ தூரத்திற்கு சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்ட சாலை அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்று பிரான்ஸ் அரசு கூறியிருக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The World's first solar panel road plays 2,800 sq m of electricity-generating panels and will be used by about 2,000 motorists a day.
Please Wait while comments are loading...

Latest Photos