புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்!

Written By:

பிரிமியம் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் சந்தைப் போட்டி வலுத்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி உள்ளது.

இந்த இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.

ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டெர் மற்றும் ரோட் க்ளைடு ஸ்பெஷல் ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இவை சிறிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளன.

ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டெர் மோட்டார்சைக்கிளில் 1,200சிசி வி-ட்வின் எவோலூயூசன் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 96 என்எம் டார்க் திறனை இந்த எஞ்சின் வெளிப்படுத்தும். 

இந்த புதிய மாடலில் 4 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. வேகம், ஆர்பிஎம் அளவு, நேரம், ட்ரிப் மீட்டர், கியர் இண்டிகேட்டர் ஆகிய தகவல்களை இதன் மூலமாக பெற முடியும். 

ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டெர் மாடல் ரூ.9.70 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். 

அடுத்து 2017 ஹார்லி டேவிட்சன் ரோட் க்ளைடு ஸ்பெஷல் மோட்டார்சைக்கிளும் இந்தியா வந்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் ஏற்கனவே இருந்த 1,745சிசி எஞ்சினுக்கு பதிலாக, புத்தம் புதிய மில்வாக் எயிட் 107 வி-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் 6.5 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு 2017 மாடலாக வரும் அனைத்து ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு வசதிகளை கொண்ட இந்த உயர்வகை மோட்டார்சைக்கிள் ரூ.32.81 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாத இறுதியிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும் என்று ஹார்லி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Harley-Davidson has launched its 2017 range of motorcycle in India including the all new Roadster and Road Glide Special.
Please Wait while comments are loading...

Latest Photos