டார்க் டி6எக்ஸ் - இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம்

By Ravichandran

டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம், டார்க் டி6எக்ஸ் (T6X) என்ற பெயரில் வர்த்தக ரீதியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்கின்றனர்.

டார்க் டி6எக்ஸ் தான் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாகவும் விளங்குகிறது.

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பிரயோகம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் மாசு உமிழ்வு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை என்றும் கூறலாம்.

இந்தியாவிலும் இந்த எலக்ட்ரிக் வாகனங்களின் பிரயோகம் வேகமாக அதிகரிக்கிறது.

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்...

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், இந்தியாவின் பூனேவை மையமாக கொண்டு இயங்கும் எலக்ட்ரிக் டூ வீலர் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.

டார்க் டி6எக்ஸ், துவக்கம் முதல் கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், 125சிசி கம்யூட்டர் செக்மென்ட் பிரிவில் பிற வாகனங்களுடன் போட்டி போட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், லித்தியம் இயான் பேட்டரி கொண்டுள்ளது. 15A ஆதாரம் (source) மூலம் சார்ஜ் செய்யப்படும் இதன் பேட்டரி, ஒரு மணி நேரத்திற்குள் 80% என்ற அளவிற்கு சார்ஜிங் ஆகிவிடும்.

சார்ஜிங்;

சார்ஜிங்;

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், முழுமையாக சார்ஜிங் ஆவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆகலாம்.

ஒரு முறை முழுமையாக சார்ஜிங் செய்தால், இது 100 கிலோமீட்டர் வரை செல்லும் வகையிலான ரேஞ்ச் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோமீட்டர் என்ற எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், பிரேக் போடும் போதெல்லாம் சார்ஜ் உண்டாக்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், நேவிகேஷன் உடைய டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் கம்பேட்டிபிளிட்டி ஆகியவற்றை முக்கியமான அம்சங்களாக கொண்டுள்ளது.

விலை;

விலை;

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் விலை, அதன் போட்டி நிறுவனத்தின் தயாரிப்புகளை காட்டிலும் விலை கூடுதலாக இருக்கலாம். ஆனால், குறைந்த அளவிலான வாகனம் இயக்க செலவுகள் மூலம், இதன் கூடுதல் விலையின் வித்தியாசத்தை, வாடிக்கையாளர்கள் திரும்ப எடுத்துவிடலாம் என டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மட்டுமே செலவாகும். ஏற்கனவே, டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பூனேவில் 2 சார்ஜிங் மையங்களை நிறுவியுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் வரும் பண்டிகை காலங்களின் போது, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை விவரங்கள் வெளியாகியது

லோஹியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Tork Motorcycles is set to launch their first and India's first commercially manufactured electric motorcycle, called as Tork T6X Electric Motorcycle. Tork Motorcycles is Pune based electric bike manufacturing company. Its first product for India, T6X has been designed ground up. T6X is expected to launch in India around this festive season. To know more, check here...
Story first published: Saturday, August 13, 2016, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X