உலகின் மிக வேகமான டீசல் எஸ்யூவி - பென்ட்லீ பென்டைகா விரைவில் அறிமுகம்

Written By:

உலகின் மிக வேகமான டீசல் எஸ்யூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் பென்ட்லீ பென்டைகா விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிறது. தற்போது, இதன் படங்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக, பென்ட்லீ நிறுவனம் தயாரிக்கும் பென்டைகா எஸ்யூவி தான் உலகின் மிக வேகமான எஸ்யூவியாக இருக்கிறது.

பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

முதல் டீசல் கார்...

இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லீ நிறுவனம், உலக அளவில் மிகவும் சொகுசு மிக்க கார்களை தயாரித்து வழங்குகிறது. தற்போது, இங்கிலாந்தின் க்ரீவ் (Crewe) என்ற இடத்தில் பென்ட்லீ உற்பத்தில் ஆலையில் தயாரிக்கப்படும் டீசல் இஞ்ஜின் கொண்ட பென்டைகா எஸ்யூவி தான், இந்நிறுவனத்தின் முதல் டீசல் கார் ஆகும்.

அதிவேகமான எஸ்யூவி;

பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவி தான் உலகிலேயே அதிவேகமான டீசல் எஸ்யூவி என இந்நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும், இதன் இஞ்ஜின் மற்றும் இதன் திறன், இந்த வாதத்தை பெய்பிக்கும் வகையில் உள்ளது.

இஞ்ஜின்;

பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவி, 4.0-லிட்டர் வி8 டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், ட்ரிபிள் சார்ஜிங் அடிப்படையிலான ஃபோர்ஸ்ட் இண்டக்ஷன் சிஸ்டம் கொண்டுள்ளது.

பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவியில், 2 ட்வின்-ஸ்க்ரோல் டர்போசார்ஜர்கள் உள்ளது. இதன் திறன் எலக்ட்ரிக் சூப்பர்சார்ஜர் மூலம் கூட்டப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் சூப்பர்சார்ஜர், டார்க் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், முதல் ட்வின்-ஸ்க்ரோல் டர்போசார்ஜரை வேகப்படுத்திவிடுகிறது.

முதல் டர்போ, அழுத்தத்தை வழங்கும் கடமைகளை (force-feeding duties) ட்வின்-ஸ்க்ரோல் டர்போசார்ஜரிடம் கடத்துவதற்கு முன் மிட் ரேஞ்ச் கிரன்ட்டை அதிகரிக்கிறது.

செயல்திறன்;

ட்ரிபிள் சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின், 429 பிஹெச்பியையும், 900 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது 6.0 லிட்டர் ட்வின்-டர்போ டபுள்யூ பெட்ரோல் இஞ்ஜின் வெளிப்படுத்தும் அதே பவர், டார்க் அளவாகும்.

கியர்பாக்ஸ்;

பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவியின் இஞ்ஜின், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான், 4-சக்கரங்களுக்கும் பவர் கடத்தப்படுகிறது.

பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவி, நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவி, அதிகப்படியாக மணிக்கு 270 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள்;

பென்ட்லீ பென்டைகா பெட்ரோல் எஸ்யூவியோடு ஒப்பிடுகையில், பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவியை தெளிவாக வேறுபடுத்தும் விதமாக, இந்த மாடலில், பிளாக் ரேடியேட்டர் மெஷ், ட்வின் குவாட் டெயில்பைப்கள் மற்றும் வி8 பேட்ஜ்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதர மாற்றங்கள்;

பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவி, சற்று மாற்றி அமைக்கப்பட்ட எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் டியூன்ட் சஸ்பென்ஷன் சிஸ்டம் உள்ளது. இந்த டியூன்ட் சஸ்பென்ஷன் சிஸ்டம், நைட்ரஜன் ஆக்சைட்களின் மாசு உமிழ்வை குறைக்கும் வகையில் உள்ள எஸ்சிஆர் எனப்படும் செலெக்டிவ் கேட்டளிட்டிக் ரிடக்ஷன் சிஸ்டதிற்கான (Selective Catalytic Reduction system (SCR)) எக்ஸ்ஹாஸ்ட் ட்ரீட்மெண்ட் சொல்யூஷனை கொண்டுள்ள பெரிய டேங்க்கிற்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்;

புதிய பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவி 2017 ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

விலை;

புதிய பென்ட்லீ பென்டைகா டீசல் எஸ்யூவி, £135,800-பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 1.18 கோடி ரூபாய்) மதிப்பில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இது, தற்போதைய நுழைவு-நிலை டபுள்யூ12 பென்டைகா மாடலை காட்டிலும் £30,000-பவுண்ட்கள் ( இந்திய மதிப்பில் 26.1 லட்சம் ரூபாய்) குறைவான விலை கொண்டுள்ளது.

மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
British carmaker Bentley has released the screens off the diesel powered variant of its ultra-luxurious Bentayga SUV. New Bentayga diesel is first diesel powered production car, made in Bentley production facility in Crewe, England. New Bentley Bentayga will go on sale in January 2017 for £135,800 (Rs. 1.18 crore). To know more about Bentley Bentayga, check here...
Please Wait while comments are loading...

Latest Photos