புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Written By:

பிஎம்டபுள்யூ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த தலைமுறை பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி (கிரான் டூரிஷ்மோ) மாடல், இந்தியாவில் இந்த அக்டோபர் 19-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இந்த தசரா மற்றும் பண்டிகை காலங்களின் போது, புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வகையில், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி...

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபுள்யூ நிறுவனம் தயாரிக்கும் புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி, சமீபத்தில் பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. இது இந்த பண்டிகை காலத்தை ஒட்டி, சரியான நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இஞ்ஜின்;

புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி மாடலுக்கு, 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இஞ்ஜின், 187 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டாதாக இருக்கும்.

கியர்பாக்ஸ்;

புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி மாடலின் இஞ்ஜின், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

சர்வதேச சந்தைகளுக்கான இஞ்ஜின்கள்;

சர்வதேச சந்தைகளுக்கான பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி, 3 பெட்ரோல் இஞ்ஜின்கள் மற்றும் 5 டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி மாடல் பற்றி எந்த விதமான தகவல்களும் வெளியாகாமல் உள்ளது. சர்வதேச சந்தைகளுக்கு வழங்கப்படும் மாடலே இந்தியாவிலும் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளுக்கு வழங்கப்படும் மாடலுக்கும், இந்தியாவில் வழங்கப்படும் மாடலுக்கும் வித்தியாசங்கள் இருக்காது.

விற்கப்படும் விதம்;

புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி மாடல், சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட வடிவிலேயே இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும்.

இந்தியாவில் உற்பத்தி;

காலம் செல்ல செல்ல, கிடைக்கும் வரவேற்ப்பை பொருத்து, புதிய பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் ஜிடி மாடல், சிகேடி அல்லது கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் யூனிட் என்ற முறையில் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யபட்டு, பின்னர் இங்கு அசெம்பிள் செய்யபட்டு விற்பனை செய்யப்படலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Next-gen BMW 3 Series GT (Gran Turismo) model would be introduced in India on October 19, 2016. German luxury car maker is likely to initially introduce its 3 Series GT as a CBU (Completely Built Unit). BMW India will gauge demand and decide whether or not CKD (Completely Knocked Down) 3 Series GT should be introduced in India. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos