செவர்லே நடத்தும் பாடி மற்றும் பெயின்ட் சர்வீஸ் முகாம் இந்தியா முழுவதும் துவக்கம்

Written By:

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவ்வப்போது தங்களின் வாடிக்கையாளர்களுக்காக சர்வீஸ் முகாம்கள் நடத்துவது வழக்கம். அந்த வகையில் செவர்லே நிறுவனமும், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக கார்களின் பாடி மற்றும் பெயின்ட் தொடர்புடைய சேவைகளுக்காக ஒரு பிரத்யேக (எக்ஸ்குளூசிவ்) சர்வீஸ் முகாம் நடத்துகின்றனர்.

செவர்லே நடத்தும் பாடி மற்றும் பெயின்ட் சர்வீஸ் முகாம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

முதல் முகாம்;

எந்த ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் மூலமாகவும், பாடி மற்றும் பெயின்ட் தொடர்புடைய சேவைகளுக்காக சர்வீஸ் முகாம் நடத்தப்படுவது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை ஆகும். அமெரிக்காவை சேர்ந்த செவர்லே நிறுவனம் அத்தகைய பிரத்யேக சர்வீஸ் முகாமை நடத்துகிறது.

சர்வீஸ் முகாம் நடைபெறும் நாட்கள்;

செவர்லே நடத்தும் பாடி மற்றும் பெயின்ட் சர்வீஸ் முகாம், செப்டம்பர் 23-ஆம் தேதி துவங்கி ஒரு வார காலம் நடைபெறும். இந்த சர்வீஸ் முகாம், இந்தியா முழுவதும் 150 மையங்களில் நடத்தப்படுகிறது. செவர்லே நிறுவனம், இந்த சர்வீஸ் முகாம்களின் போது வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான அனுபவத்தை வழங்கும் முனைப்பில் உள்ளது.

பழைய வாகனங்கள்;

சிறிய அளவிலான டென்ட்கள், ஸ்கிராட்ச்கள் இந்த செவர்லே பாடி மற்றும் பெயின்ட் சர்வீஸ் முகாம்களில் சரி செய்யப்படும். மேலும், ஒபல் கோர்சா, ஆவியோ, செவர்லே ஆப்ட்ரா, செவர்லே ஸ்பார்க் போன்ற பழைய வாகனங்கள் கொண்ட வாடிக்கையாளர்களும், தங்கள் வாகனத்தை கொண்டு வந்து, இந்த சர்வீஸ் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.

ஆதாயங்கள்;

பாதிக்கபட்டுள்ள பாடி பாகங்களுக்கு, செவர்லே நிறுவனம் சுமார் 70% விலை குறைப்பு செய்கிறது. மேலும், அனைத்து பாடி பாகங்களும் குறைந்தபட்சம் 5% தள்ளுபடியில் கிடைக்கும். கூடுதலாக, பெயிண்டிங் கட்டணத்தில் 25% தள்ளுபடி அளிக்கப்படும்.

பிற சலுகைகள்;

செவர்லே நடத்தும் பாடி மற்றும் பெயின்ட் சர்வீஸ் முகாம்களில், இலவச அன்டர்பாடி இன்ஸ்பெக்ஷன்களும் நடத்தப்படும். மேலும் ஆண்டி-ரஸ்ட் கோட்டிங், பாடி பாலிஷ் மற்றும் இன்டீரியர் கிளீனிங் போன்ற சேவைகளுக்கும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகிறது.

இறுதி கருத்து;

ஆகவே, வாடிக்கையாளர்களே நீங்கள் ஏதாவது செவர்லே வாகனம் வைத்திருந்தால், செவர்லே நடத்தும் பாடி மற்றும் பெயின்ட் சர்வீஸ் முகாம்களில் செப்டம்பர் 30 தேதிக்குள் பங்குபெற்று பலன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #செவர்லே #chevrolet
English summary
Chevrolet is organising an exclusive service camp called Chevrolet Complete Care Body & Paint Camp. It is first time, an automobile manufacturer conducts body and paint camp in India. This body and paint camp is organised from September 23 to September 30th,2016. This Service Camp is held over 150 locations in India. To know more on this Service Camps, check here...
Please Wait while comments are loading...

Latest Photos