ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் புக்கிங் துவங்கியது

By Ravichandran

ஃபியட் நிறுவனம் தயாரித்து வழங்கும் ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் புக்கிங் இந்தியாவில் துவங்கிவிட்டது. இந்தியாவில் பண்டிகை காலங்களின் போது எக்கசக்கமான ஆட்டோமொபைல் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். அதே போல், இந்த ஆண்டும் பல்வேறு டூ வீலர்கள் மற்றும் கார்கள் அறிமுகம் செய்யப்பட காத்திருகிறது.

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் பற்றிய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ்...

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ்...

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ், அவென்ச்சுரா கிராஸ்ஓவரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் குணாம்சங்கள் சற்று மென்மையாக உள்ளன.

சவால்கள்;

சவால்கள்;

ஃபியட் நிறுவனத்தின் தயாரிப்புகள், அதன் கட்டுறுதியான தரத்திற்கும், ஈர்க்கும் டிசைன் மொழிக்காகவும் மிகவும் புகழ்பெற்றது. எனினும், ஃபியட் நிறுவனம், விற்பனை விஷயத்தில் ஏராளமான சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது.

மிக அதிகமான விலைகளும், குறைந்த அளவிலான டீலர்ஷிப் நெட்வர்க்களும், இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

புக்கிங்;

புக்கிங்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் அறிமுகம் மூலம், ஃபியட் நிறுவனம், இந்தியாவில் தங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க விரும்புகின்றனர். ஃபியட் நிறுவனம், ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் புக்கிங்கை, 21,000 ரூபாயை அடிப்படை புக்கிங் தொகையாக கொண்டு, ஏற்றுக்கொண்டு வருகிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகிறது. ஃபியட் அவென்ச்சுரா மாடலிலும் காணப்படும் இதன் 1.4 லிட்டர், டி-ஜெட் பெட்ரோல் இஞ்ஜின், 138 பிஹெச்பியையும், 210 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் அல்லாது புன்ட்டோ எவோ மாடலிலும் காணப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இஞ்ஜின், 92 பிஹெச்பியையும், 209 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் 2 இஞ்ஜின்களுமே 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

பொழுதுபோக்கு அம்சங்கள்;

பொழுதுபோக்கு அம்சங்கள்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலில், புளுடூத் உடைய டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆக்ஸ் மற்றும் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

கான்செப்ட் வடிவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியட் அவென்ச்சுரா கான்செப்ட், டியூவல் பெயின்ட் வேலைப்பாடு, எல்இடி ஹெட்லைட்கள், ஃபால்லோ மீ ஹேட்லேம்ப்கள், ஓஆர்விஎம் டர்ன் இண்டிகேட்டர்கள், பனோராமிக் சன்ரூஃப், ரெட் ஆக்சென்ட்கள் உடைய 17-இஞ்ச் அல்லாய் வீல்கள், எல்இடி ஆப்டிக்கல் கைட் உடைய டெயில்லேம்ப்கள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருந்தது.

மேலும், இது டியூவல் டோன் இன்டீரியர் கொண்டிருந்தது. ஆனால், கான்செப்ட் வடிவில் இருந்த சில அம்சங்கள், உற்பத்தி நிலை மாடலில் விளக்கி கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலில், முன் பக்கத்தில் டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக உள்ளன.

விலை;

விலை;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல், சுமார் 8 லட்சம் ரூபாய் - 9 லட்சம ரூபாய் விலையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு

ஃபியட் அவென்டூரா கிராஸ்ஓவர் அறிமுகம் - படங்களுடன் விபரம்

இந்தியாவிலிருந்து அவென்டூராவை ஏற்றுமதி செய்ய ஃபியட் திட்டம்

Most Read Articles
மேலும்... #ஃபியட் #fiat
English summary
Fiat Starts Bookings for their Avventura Urban Cross Model. Fiat Avventura Urban Cross is based on Avventura crossover. However, Urban Cross is much more mellow and soft in characteristics. Fiat is accepting bookings for Urban Cross for minimum deposit of Rs 21,000. Fiat Urban Cross is powered by options of petrol and diesel engines. To know more, check here...
Story first published: Wednesday, September 14, 2016, 19:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X