புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இந்தியாவில் அக்டோபரில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இந்தியாவில் அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் தான் பிரியோ ஹேட்ச்பேக்கை தயாரித்து வழங்குகிறது. ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கிற்கு மாற்றங்கள் செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்நிலையில், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இந்தியாவில் இந்த பண்டிகை காலங்களை ஒட்டி, அக்டோபர் 2016-ல் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்களை ஒட்டி ஏராளமான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பை படங்கள்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், ஷோரூம்களை வந்தடைந்துவிட்டது. ஷோரூம்களில் எடுக்கபட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர் பொருத்த வரை, புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், மறுவடிவமைக்கப்பட்ட பிரண்ட்-என்ட் (முன்-முனை), புதிய பம்பர், புதிய ஃபாக்-லேம்ப் ஹவுசிங்க்ஸ் மற்றும் பெரிய ஏர் டேம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

குரோம் பூச்சு;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் புதிய ஃபிரண்ட் கிரில், ஹோண்டா ஜாஸ் மாடலில் உள்ளது போன்றே குரோம் பூச்சு உடைய பியானோ பிளாக் ஃபினிஷ் கொண்டுள்ளது. இதன் ரியர் பகுதியில் மற்றும் பக்கவாட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

முக்கிய மேம்பாடுகள்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கில், பியானோ பிளாக் ஃபினிஷ் உடைய செங்குத்தாக நிறுவப்பட்ட புதிய பிளாக் டேஷ்போர்ட் தான் முக்கியமான மேம்பாடுகளாக உள்ளது. இதன் ஏசி வென்ட்கள் அருகில் உள்ள சில்வர் இன்செர்ட்களும், பயணியர் பக்கத்தில் உள்ள டேஷ்போர்ட் பகுதி ஆகியவை முக்கிய மேம்பாடுகளாக உள்ளன.

கூடுதல் அம்சங்கள்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கில், ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல்கள் உடைய புதிய 2-டிஐஎன் ஆடியோ சிஸ்டம், ஹோண்டா கனெக்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை கூடுதல் அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேம்பாடுகள்;

பொலிவு கூட்டப்பட்ட அமேஸ் போல், புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கிலும் மெக்கானிக்கல் மேம்பாடுகள் எதுவும் செய்யப்படாது. மாறாக, பிற மேம்பாடுகள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும்.

இஞ்ஜின்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கில், 4-சிலிண்டர்கள் உடைய ஹோண்டாவின் 1.2 லிட்டர், ஐ-விடெக் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இஞ்ஜின், 87 பிஹெச்பியையும், 109 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

கியர்பாக்ஸ்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வெளியாகும்.

விலை;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், அதன் முந்தைய மாடலுக்கு சமமான விலையிலோ அல்லது அதற்கும் கூடுதலான விலையிலோ அறிமுகம் செய்யப்படலாம்.

Images Credit ; www.autosarena.com

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Honda would launch their facelifted Brio in early October 2016. New Brio Cars have reached Showrooms. Spy Pics taken in Showrooms are released now. Similar to the Amaze facelift, facelifted Brio is expected only to feature cosmetic updates and no mechanical updates. We expect Honda to price the facelifted hatch somewhere close to its predecessor. To know more, chek here...
Please Wait while comments are loading...

Latest Photos