புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் தான் இந்த பிரியோ ஹேட்ச்பேக்கை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கிற்கு நீண்ட காலமாக பொலிவு கூட்ட வேண்டிய கட்டாயம் இருந்ததால், ஹோண்டா நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்து புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கை தயார் செய்து வருகிறது. புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் தொடர்புடைய தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் அறிமுகம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், டீலர்ஷிப்பில் வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இவை தான் இந்தியா உள்ளே காணப்படும் புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் முதல் படங்களின் தொகுப்பு ஆகும்.

தரிசனம்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், முதன் முதலாக இந்தோனேஷியாவில் நடைப்பெற்ற ஐஐஎம்எஸ் 2016-ல் தான் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தோனேஷியாவிற்கான மாடலில் உள்ளது போல், இந்தியாவிற்கான புதிய ஹோண்டா பிரியோவிலும் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையிலான ஸ்போர்ட்டியான முகப்பு தோற்றம் உள்ளது.

எக்ஸ்டீரியர்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், ஃபாக் லேம்ப்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஃபா இண்டேக்குகள் (faux intakes) உள்ளது. மேலும், இது பெரிய செகண்டரி கிரில் மற்றும் அகலமான பிளாக் கிரில் கொண்டுள்ளது.

இதன் ரியர் பக்கத்தில் எந்த விதமான மேம்பாடுகளும் செய்யப்படவில்லை.

இன்டீரியர்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் உட்புறத்தில், அமேஸ் மற்றும் பிஆர்-வி மாடலில் காணப்படும் புதிய டேஷ்போர்ட் ஏற்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இன்டீரியர் மேட் மற்றும் கிளாஸ்ஸி பிளாக் ட்ரிம் மெட்டீரியல்களின் கலவை மற்றும் சில்வர் ஆக்சன்ட்கள் உடைய பிளாக் தீம் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டீயரிங் மவுண்ட்டட் கண்ட்ரோல்கள், ஹோண்டா கனெக்ட் வசதி கொண்ட புதிய ஆடியோ சிஸ்டம் கொண்டுள்ளது.

கூடுதலாக, ஹோண்டா நிறுவனம், இந்த புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கில், புளுடூத் ஸ்ட்ரீமிங் மற்றும் டெலிஃபோனி ஆகிய வசதிகள் கொண்ட 2-DIN ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், 4-சிலின்டர்கள் உடைய 1.2 லிட்டர், ஐ-விடெக் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 88 பிஹெச்பியையும், 109 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

புதிய ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்ககின் இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய பிரியோ, வரும் நாட்களில் அமேஸ் மாடலில் உள்ள சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுடனும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Spy Pictures Credit ; www.indianautosblog.com

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஹோண்டா #honda
Story first published: Thursday, September 8, 2016, 11:44 [IST]
English summary
Spy Pics of new Honda Brio facelift, which were spotted at an Indian dealership ahead of its launch were released. These images you see are first ever pics of Brio facelift in India. Indian version of Brio also gets sportier front fascia that would attract more younger audience. Offered on new Brio will be 1.2-litre, four-cylinder, i-VTEC petrol engine. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos