ஹோண்டா இந்தியா வழங்கும் ஆதாயங்கள் மற்றும் சலுகைகள்

Written By:

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஈர்க்கும் வகையிலான ஆதாயங்கள் மற்றும் சலுகைகள் வழங்குகின்றனர். பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள், விற்பனை அளவுகளை தக்கவைத்து கொள்ள அல்லது விற்பனையை கூட்டும் நோக்கில், சலுகைகள் வழங்குவது வழக்கம். இவ்வாறு ஹோண்டா நிறுவனமும் ஏராளமான சலுகைகள் மற்றும் ஆதாயங்களை வழங்குகின்றனர்.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் வழங்கும் சலுகைகள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

குறுகிய கால சலுகைகள்;

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், ஏறக்குறைய தங்களின் அனைத்து கார் மாடல்கள் மீதும் அட்டகாசமான சலுகைகள் அளிக்கின்றது. வாடிக்கையாளர்கள் அதிகப்படியாக 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகள் பெறலாம். இந்த சலுகைகள் மற்றும் ஆதாயங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்கள் மற்றும் ட்ரிம்கள் மீது மட்டுமே கிடைக்கிறது.

மொபிலியோ;

ஹோண்டா மொபிலியோ ஸ்டேஷன் வேகன், சூப்பரான சலுகைகள் மற்றும் ஆதயங்களுடன் கிடைக்கும். அனைத்து வேரியன்ட்கள் மீதும் இந்த சலுகைகள் கிடைக்கிறது. வெறும் 2015-ஆம் ஆண்டின் மொபிலியோ மாடல் மட்டுமே சலுகைகளுடன் கிடைக்கும். பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடல்கள் ஆகிய இரண்டின் மீதும் இச்சலுகைகள் அளிக்கப்படுகிறது.

சிஆர்வி;

ஹோண்டா சிஆர்வி பிரிமியம் எஸ்யூவி, 70,000 ரூபாய் வரையிலான ஆதாயங்களுடன் கிடைக்கும். ஆனால், இந்த சலுகைகள் மற்றும் ஆதாயங்கள், 2015 ஹோண்டா சிஆர்வி பிரிமியம் எஸ்யூவி மீது மட்டுமே கிடைக்கும். வாடிக்கையாளர்கள், இந்த சலுகைகளை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஹோண்டா டீலர்ஷிப்களிலும் பெறலாம்.

ஹோண்டா சிட்டி - பெட்ரோல்;

2015 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலின் அனைத்து வேரியன்ட்கள் மீதும் 30,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கும். 2016 ஹோண்டா சிட்டி செடான் மாடலின் இ, எஸ், எஸ்வி, சிவிடி, விஎக்ஸ் சிவிடி ட்ரிம்கள் மீது 15,000 மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கும். 2016 ஹோண்டா சிட்டி செடான் மாடலின் எஸ்வி, வி, விஎக்ஸ், விஎக்ஸ் (ஓ) எம்டி ஆகிய ட்ரிம்கள், வெறும் 1 ரூபாய் செலவில் இன்சூரன்ஸ் வசதியுடன் கிடைக்கும்.

ஹோண்டா சிட்டி - டீசல்;

2015 ஹோண்டா சிட்டி டீசல் மாடலின் அனைத்து வேரியன்ட்கள் மீதும் 60,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் தரப்படுகிறது. 2016 ஹோண்டா சிட்டி செடானின் டீசல் மாடல், 15,000 ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் கிடைக்கிறது. மேலும், அனைத்து ட்ரிம் தேர்வுகள் மீதும், வெறும் 1 ரூபாய் செலவில் இன்சூரன்ஸ் வசதி பெறலாம்.

ஜாஸ் - டீசல்;

2015 ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் இஞ்ஜின் கொண்ட மாடல், 60,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்களுடன் கிடைக்கும். 2016 ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடலின் இ, எஸ், வி ஆகிய ட்ரிம்கள் 25,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயத்துடன் கிடைக்கிறது. அதேபோல், 2016 ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடலின் வி மற்றும் விஎக்ஸ் ட்ரிம்கள் மீது 40,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் அளிக்கப்படுகிறது.

ஜாஸ் - பெட்ரோல்;

2015 ஹோண்டா ஜாஸ் காரின் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட விஎக்ஸ் ட்ரிம் மட்டும் 40,000 ரூபாய் ஆதாயங்களுடன் கிடைக்கிறது. பிற வேரியன்ட்கள் மீது 15,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். 2016 ஹோண்டா ஜாஸ் காரின் பெட்ரோல் மாடலின் வி, விஎக்ஸ் (எம்டி) ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் மீது 10,000 மதிப்பிலான சலுகைகள் கிடைக்கும்.

அமேஸ்;

பொலிவு கூட்டபடுவதற்கு முந்தைய (ப்ரீ-ஃபேஸ்லிப்ட்) 2015 ஹோண்டா அமேஸ் மாடல் மீது 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கிறது. பொலிவு கூட்டபடுவதற்கு முந்தைய (ப்ரீ-ஃபேஸ்லிப்ட்) 2016 ஹோண்டா அமேஸ் மாடல், 60,000 ரூபாய் வரையிலான ஆதாயங்களுடன் அளிக்கப்படுகிறது. 2016 ஹோண்டா அமேஸ் மாடலின் இ வேரியன்ட்டை தவிர்த்து, 43,000 ரூபாய் மதிப்பிலான ஆதயங்களுடன் கிடைக்கும்.

பிரியோ;

2015 ஹோண்டா பிரியோ மாடல் மீது, 25,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கும். 2016 ஹோண்டா பிரியோ மாடலுக்கு, வெறும் 1 ரூபாய் செலவுடன் இன்சூரன்ஸ் வசதி கிடைக்கும்.

சலுகைகள் இல்லாத மாடல்கள்;

ஆச்சர்யமூட்டும் விதமாக, ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு எந்த விதமான சலுகைகள் அல்லது ஆதாயங்களை வழங்கவில்லை.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Honda Cars India is providing exciting offers and benefits on their entire range of four-wheelers. Maximum benefit worth up to Rs. 1 lakh can be availed by customers. These Offers and benefits will be available for limited period on select variants and trims. Surprisingly, Honda Cars India has not provided offers and benefits on BR-V compact SUV. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos