இந்தியாவிற்கான புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி படங்கள் வெளியீடு

Written By:

புதிய டிசைனுடன் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட பின் சில மாடல்கள் புகழ்பெற்றதாக மாறினால், அதன் அடிப்படையில் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதும் அல்லது அத்தகைய மாடல்களில் மேம்பாடுகள் செய்யப்பட்டு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், தற்போது மேம்படுத்தபட்டு வழங்கப்படும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி...

க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து வழங்கும் கார் ஆகும். ஹூண்டாய் நிறுவனம், இந்த க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியை ஜூலை 2015-ல் அறிமுகம் செய்தது. இது சர்வதேச சந்தைகளுக்கான மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக, ஐஎக்ஸ்25 ( ix25) என பெயர் சூட்டப்பட இருந்த ஹூண்டாய் க்ரெட்டா, தற்போது பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

படங்கள் வெளியீடு;

தற்போது ஹூண்டாய் பிரேசில் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் படங்களை வெளியிட்டு டீஸ் செய்துள்ளது. ஹூண்டாய் பிரேசில் நிறுவனம் வெளிட்ட படங்கள் படி, பிரேசில் சந்தைகளுக்கான டிசைன் மற்றும் விவரக்குறிப்புகளில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. பிரேசில் சந்தைகளுக்கான புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, புதிய இஞ்ஜின் தேர்வுகள் கொண்டிருக்கும்.

குரோம் பூச்சு;

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் கிரில்லை சுற்றி, செய்யப்பட்டுள்ள அதிகப்படியான குரோம் பூச்சு கவணிக்கும்படியாக உள்ளது. இதன் முன் பம்பர் மற்றும் பின் பம்பர் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேசில் சந்தைகளுக்கான புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவிக்கு ஹாரிசாண்டல் ஃபாக் லேம்ப்கள் (கிடைமட்ட ஃபாக் லேம்ப்புகள்) ஏற்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில், ரியர் டோருக்கும், புதிய ரிஃப்ளெக்டர்களுக்கு செய்யபட்டுள்ள குரோம் பூச்சும் தெளிவாக தெரிகிறது.

இஞ்ஜின்;

பிரேசிலுக்கான புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியின் ஹெச்பி20 மாடலில், ஹூண்டாயின் 1.6 லிட்டர் ஃப்லெக்ஸ்-ஃப்யூவல் இஞ்ஜின் உபயோகிக்கப்படும். இந்த இஞ்ஜின், 128 பிஹெச்பியையும், அதிகபட்சமாக 161.81 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும். ஹூண்டாய் நிறுவனம், இந்த இஞ்ஜினை தேர்வு முறையிலான 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கும்.

அறிமுகம்;

பிரேசில் சந்தைகளுக்கான புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, 2016 சா பாவ்லோ ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்படும். இது, பிரேசிலில் 2017-ல் அறிமுகம் செய்யப்படலாம். இதே புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளிலும் சிறிய அளவிலான மேம்பாடுகளுடன் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai Motors has teased Fans with pictures of Hyundai Creta Compact SUV which has new Updated Design and features. Hyundai Motors introduced Creta as an international product during July 2015. Now, Brazilian market is set to get Creta, which was to be named as ix25. Hyundai Brazil has shared two teaser images of its all-new Creta model. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos