ஏடி கொண்ட எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் விவரக்குறிப்புகள் வெளியீடு

By Ravichandran

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், ஏடி எனப்படும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் விவரக்குறிப்புகள் இந்தியாவில் வெளியிட்டது. ஏடி உள்ள இந்த ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் அறிமுகம் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தன.

இந்நிலையில், பண்டிகை காலங்களுக்கு வெகு முன்னதாகவே, ஏடி உள்ள ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் விவரக்குறிப்புகள் சத்தமில்லாமல் அமைதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏடி உள்ள ஹூண்டாய் எலைட் ஐ20 தொடர்புடைய கூடுதல் தகவல்களை, இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இணையதளத்தில் சேர்ப்பு;

இணையதளத்தில் சேர்ப்பு;

ஏடி உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஏடி உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், 4 சிலிண்டர்கள், 16-வால்வுகள் உடைய 1.4 லிட்டர் டியூவல் விடிவிடி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 99 பிஹெச்பியையும், 132 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஏடி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகிறது. இதே 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு தான், வெர்னா 4எஸ் மற்றும் கிராண்ட் ஐ10 மாடல்களிலும் காணப்படுகிறது.

கிடைக்கும் வேரியன்ட்;

கிடைக்கும் வேரியன்ட்;

ஏடி வசதியானது ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் மேக்னா வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

ஏடி உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், டியூவல் ஏர்பேக்குகள், கீலஸ் என்ட்ரி (சாவி இல்லாமல் நுழையும் வசதி), டிரைவர் மற்றும் பயணியர் சீட்களுக்கு சீட்பெல்ட் ப்ரீ டென்ஷனர்கள், அல்லாய்களுக்கு பதிலாக வீல் கேப்கள் ஆகிய வசதிகள் உள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

பொழுதுபோக்கு பொருத்த வரை, ஏடி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் மேக்னா வேரியன்ட், 2-டிஐஎன் இன்டக்ரேட்டட் ரேடியோ, பிரன்ட் மற்றும் ரியர் ஸ்பீக்கர்கள் உடைய எம்பி3 பிளேயர்கள் மற்றும் ட்வீட்டர்கள் உள்ளன.

மேலும், புளுடூத் கனெக்ட்டிவிட்டி, ஆக்ஸ் மற்றும் யூஎஸ்பி போர்ட்கள் உள்ளன. கூடுதலாக, இதன் ஆடியோ வசதிகளை ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

ஏசி தொடர்புடைய வசதிகள்;

ஏசி தொடர்புடைய வசதிகள்;

ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் மேக்னா வேரியன்ட், பின் இருக்கைகளில் உள்ள பயணிகளுக்கான மேனுவல் ஏசி மற்றும் எலக்ட்ரிக் முறையில் கட்டுப்படுத்தகூடிய வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் உள்ளன.

உற்பத்தி;

உற்பத்தி;

ஏடி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் உற்பத்தி துவங்கிவிட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஏடி வசதி உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் மேக்னா வேரியன்ட், செப்டம்பர் 2-வது வாரத்தில் ஷோரூம்களுக்கு வந்து சேரும்.

விலை;

விலை;

ஏடி வசதி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் விலை விவரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 விரைவில் அறிமுகம்

ஹூண்டாய் எலைட் ஐ20, 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் விரைவில் வருகிறது

ஹூண்டாய் நிறுவனம், 1,000,000 ஐ20 கார்களை விற்று சாதனை

Most Read Articles
English summary
Hyundai India has introduced automatic variant of their Elite i20 silently in their website. Much ahead of festive season, South Korean carmaker has listed specifications and features of Elite i20 automatic model. Hyundai is offering AT option of Elite i20 in Magna variant. Production of Elite i20 automatic has commenced and is expected to hit showrooms in second week of September. Prices are yet to be announced...
Story first published: Tuesday, September 6, 2016, 13:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X