மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு இணையான விலையில் வருகிறது புத்தம் புதிய ஜீப் காம்பாஸ்!

Written By:

இந்தியாவில் புத்தம் புதிய காம்பாஸ் எஸ்யூவி அறிமுகம் செய்ய இருப்பதை ஜீப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த புதிய மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு போட்டியை கொடுக்கும் என கருதப்படுகிறது.

இந்த புதிய எஸ்யூவி மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியுடன் போட்டி போடும் விலையில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதால், வாடிக்கையாளர்களிடத்தில் ஆர்வமும், ஆவலும் பீறிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜீப் செரோக்கி மற்றும் ஜீப் ரேங்லர் ஆகிய இரு பிரிமியம் எஸ்யூவி மாடல்களுடன் ஜீப் நிறுவனம் இந்தியாவில் களமிறங்கியது. ஆனால், அந்த இரு எஸ்யூவி மாடல்களும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் விலை மிக அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், ஜீப் நிறுவனம் தயாரித்திருக்கும் புத்தம் புதிய காம்பாஸ் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, பிரிமியம் எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான ஜீப் பிராண்டு களமிறக்கும் குறைவான விலை மாடலாக காம்பாஸ் இருக்கும்.

மேலும், ரன்ஜன்கவுனில் உள்ள ஃபியட் க்றிஸ்லர் குழுமத்திற்கு சொந்தமான ஆலையில் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதுவும் கிட்டத்தட்ட 50 சதவீத உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே பெறப்படுவதால் விலை மிக சவாலாக இருக்கும்.

மேலும், வலது புற ஸ்டீயரிங் வீல் அமைப்புடைய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும். அதுவும் உலக அளவில் இந்தியாவில் மட்டும்தான் வலது புற ஸ்டீயரிங் வீல் கொண்ட காம்பாஸ் மாடல் உற்பத்தி செய்யப்படும்.

அதாவது, ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்குள் புதிய காம்பாஸ் எஸ்யூவியை களமிறக்க ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் சில உயர் வகை மாடல்களுடன் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி போட்டி போடும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500வைவிட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஜீப் காம்பாஸ் எஸ்யூவி பிரிமியம் பிராண்டு அந்தஸ்துடன் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களை எளிதாக ஈர்க்கும் என்று கருதப்படுகிறது.

ஜீப் ரெனிகேட் எஸ்யூவியின் அதே கட்டமைப்பில்தான் இந்த புதிய காம்பாஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜீப் நிறுவனங்களுக்கு உரித்தான பிரத்யேக முகப்பு க்ரில் அமைப்பு, கட்டுஸ்தான தோற்றம் என வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று கூறலாம். வலிமையான அலாய் வீல்கள், டெயில் லைட்டுகள் வாடிக்கையாளர்களை கவரும். மொத்தத்தல் மினி ஜீப் செரோக்கீ எஸ்யூவியாக இருக்கும்.

இன்டீரியரும் மிக நேர்த்தியாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது. ஆப்பிள் கார்ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ சாப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப் என தரமான பாகங்களுடனும், வசதிகளுடன் மிகவும் பிரிமியமாக இருக்கும்.

இன்டிபென்டென்டட் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்படுவதும், 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டு வருவதும் ஆஃப்ரோடு சாகசஙகளுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும், மோனோகாக் உடல்கூடு அமைப்பும் இதற்கு வலுவானதாக இருக்கும்.

பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. அதேபோன்று, மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களில் கிடைக்கும்.

உயிர் காக்கும் காற்றுப் பைகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் என ஏராளமான விசேஷ பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

ஜீப் காம்பாஸ் எஸ்யூவி ட்ரெயில்ஹாக் மற்றும் லிமிடேட் என்ற இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், ட்ரெயில்ஹாக் மாடலில் ஆஃப் ரோடு செய்வதற்கான பல விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் கூடுதலாக இடம்பெற்று இருக்கும். இப்போது படத்தில் இருக்கும் மாடல்தான் ட்ரெயில்ஹாக். முந்தைய ஸ்லைடுகளில் பார்த்த மாடல் ஜீப் காம்பாஸ் லிமிடேட் மாடல்.

மேலும்... #ஜீப் #jeep
Story first published: Friday, November 18, 2016, 9:47 [IST]
English summary
The Compass mid-size SUV by Jeep will be launched in India sometime during mid-2017. Jeep Compass will be similar in terms of design to the Grand Cherokee luxury SUV.
Please Wait while comments are loading...

Latest Photos