டர்னிங் ரேடியஸ் 4.5 மீட்டர்தான்! ஓட்றது ரொம்ப சுலபம்! வெறும் 3.70 லட்ச ரூபாய்க்கு சூப்பரான புது கார்!

முதல் முறையாக கார் வாங்க போகும் ஒருவர், 3 முக்கியமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஓட்டுவதற்கு மிகவும் எளிமையாக இருக்க வேண்டும், அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் மற்றும் விலை மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த 3 முக்கியமான விஷயங்கள்.

இந்திய சந்தையில் கிடைக்க கூடிய ஒரு சில கார்கள் மட்டுமே இந்த 3 விஷயங்களையும் ஒரு சேர பூர்த்தி செய்கின்றன. இதில், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மிகவும் முக்கியமானது. மாருதி சுஸுகி ஆல்டோ கே 10 காரின் நீளம் (Length) மற்றும் அகலம் (Width) முறையே வெறும் 3,530 மிமீ மற்றும் 1,490 மிமீ ஆக மட்டுமே உள்ளது.

Maruti Suzuki Alto K10 Interior

அதாவது இது மிகவும் சிறிய கார். எனவே மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரை குறுகலான சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் என அனைத்து இடங்களிலும் மிகவும் எளிமையாக இயக்க முடியும். அத்துடன் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் 'டர்னிங் ரேடியஸ்' (Turning Radius) வெறும் 4.5 மீட்டராக மட்டுமே உள்ளது.

பொதுவாக ஒரு காரை வாங்கும்போது, அதன் 'டர்னிங் ரேடியஸ்' மிகவும் குறைவாக இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. அப்போதுதான் யூ-டர்ன் எடுப்பது மற்றும் பார்க்கிங் செய்வது போன்றவை எல்லாம் மிகவும் எளிமையாக இருக்கும். இந்த வகையில் மிகவும் சிறிய நீள, அகலங்கள் மற்றும் குறைவான டர்னிங் ரேடியஸ் மூலம், ஓட்டுவதற்கு மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 பூர்த்தி செய்கிறது.

Maruti Suzuki Alto K10

அடுத்தபடியாக மைலேஜ். மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.

இதை விட அதிக மைலேஜ் வேண்டும் என நீங்கள் நினைத்தால், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்களை பரிசீலனை செய்யலாம். அவை ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. ஆனால் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கிடையாது என்பது ஒரு சிறிய குறை.

கடைசியாக விலை. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் ஒரு சில பைக்குகளின் விலையை விட குறைவு. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.45 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இதன் மூலம் விலை குறைவாக இருக்க வேண்டும் என்ற பாக்ஸை மாருதி சுஸுகி ஆல்டோ கே10 'டிக்' அடிக்கிறது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மற்றும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

ஓட்டுவது எளிது, சிறப்பான மைலேஜ் மற்றும் குறைவான விலை ஆகிய காரணங்களால், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை, ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல.

நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9,787 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 8,541 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 1,246 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் விற்பனையில் 14.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso), டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, March 22, 2026, 12:28 [IST]
English summary
Maruti suzuki alto k10 sales report february 2026 15 per cent growth all details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+