களத்திற்கு வந்த பேரரசர்! மாருதி காரை விட மிகவும் குறைவான விலையில் சொகுசு கார் நிறுவனத்தின் தயாரிப்பு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இன்று (மார்ச் 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்னர், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options): ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Skoda Kushaq Facelift

இந்த காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 150 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வசதிகள் (Features): ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ஏஐ அஸிஸ்டன்ட் உடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உடன் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியண்ட் லைட்டிங், மசாஜ் வசதி உடன் கூடிய பின் பக்க இருக்கைகள் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

Skoda Kushaq Facelift

அத்துடன் வென்டிலேஷன் வசதி உடன் கூடிய முன் பக்க இருக்கைகள், ஆட்மோமேட்டிக் ஹெட்லைட்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வசதிகள் (Safety Features): ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

வேரியண்ட்கள் (Variants): புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல், இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக கிளாசிக் ப்ளஸ், சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், ப்ரஸ்டீஜ் மற்றும் மான்டீ கார்லோ என 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என ஸ்கோடா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை (Price): ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.69 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நேரடி போட்டி மாடலான மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாராவை (Maruti Suzuki Grand Vitara) விட குறைவான விலை ஆகும். மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.77 லட்ச ரூபாயாக இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஸ்கோடா இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மட்டுமல்லாது, மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), டாடா சியரா (Tata Sierra), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுக்கும், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

அத்துடன் சமீபத்தில் விற்பனைக்கு வந்த புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஹோண்டா எலவேட் (Honda Elevate), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுக்கும், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல், விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குஷாக் என்றால் சமஸ்கிருத மொழியில் பேரரசர் என்பது அர்த்தம் ஆகும். புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை காரணமாக, இந்திய சந்தையில் இனி வரும் மாதங்களில், ஸ்கோடா குஷாக் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 21, 2026, 13:00 [IST]
English summary
Skoda kushaq facelift launched in india price safety features engine options and more
மேலும்... #skoda #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+