மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காரை ஆரம்பத்திலேயே முடிச்சி விடுறதுதான் பிளானா? குறைந்த விலையில் டாடா ஹாரியர் இவி

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் ஹாரியர் இவி (Harrier EV) எலெக்ட்ரிக் காரில் புதியதாக ஒரு வேரியண்ட்டை சேர்த்து, ஆல்-வீல்-டிரைவ் (All-wheel-drive) ஆப்ஷனில் இந்த எலெக்ட்ரிக் காரை குறைந்த விலையில் கொண்டுவந்துள்ளது. அப்படி எந்த மாதிரியான வேரியண்ட்டை டாடா அறிமுகம் செய்துள்ளது என்பதையும், அதன் விலையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் டாடா மோட்டார்ஸ் முன்னிலையில் உள்ளது. அந்த அளவிற்கு டாடா பிராண்டில் இருந்து வெவ்வேறு விதமான விலைகளில் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய டாடா எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்று, ஹாரியர் இவி ஆகும்.

tata harrier ev fearless qwd

ரூ.21.49 லட்சத்தில் இருந்து ரூ.28.99 லட்சம் வரையிலான விலைகளில் ஹாரியர் இவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹாரியர் இவி காரில் புதியதாக 'ஃபியர்லெஸ் QWD' (Fearless QWD) என்கிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் ஆல்-வீல்-டிரைவ் வேரியண்ட் ஆகும். அதாவது, எலெக்ட்ரிக் மோட்டார் வெளிப்படுத்தும் இயக்க ஆற்றல் காரின் நான்கு சக்கரங்களுக்கும் செல்லும்.

இதற்காக, டாடா மோட்டார்ஸின் குவாட் வீல் டிரைவ் தொழிற்நுட்பம் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. QWD என்பது குவாட் வீல் டிரைவ்-இன் சுருக்கமே ஆகும். புதிய ஹாரியர் இவி ஃபியர்லெஸ் QWD வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.26.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் சிங்கிள்-மோட்டார் மற்றும் டபுள்-மோட்டார் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது.

tata harrier ev fearless qwd

டபுள் மோட்டார்கள் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் செட்-அப் உடன் குறைந்த விலையில் ஹாரியர் இவி வாங்க புதிய ஃபியர்லெஸ் QWD ஏற்றதாகும். காரின் முன் மற்றும் பின்பக்கங்களில் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் பெரிய அளவிலான 75kWh பேட்டரி உடன் இந்த புதிய வேரியண்ட் கிடைக்கும். இதனை காட்டிலும் விலையுயர்ந்த ஹாரியர் இவி ஆல்-வீல்-டிரைவ் வேரியண்ட்களும் உள்ளன.

புதிய ஃபியர்லெஸ் QWD வேரியண்ட்டில் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் அதிகப்பட்சமாக 390 எச்பி மற்றும் 504 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் காருக்கு கிடைக்கும். ஹாரியர் இவி காரின் இந்த புதிய வேரியண்ட்டில் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் எட்டிவிடலாம்.

இந்த வேரியண்ட்டின் 75kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 622கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். அதிவேக 120 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் (DC Fast Charger)-ஐ கொண்டு சார்ஜ் செய்தால் வெறும் 25 நிமிடங்களில் பேட்டரியை 20%-இல் இருந்து 80% வரை சார்ஜ் செய்துவிடலாம்.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், புதிய ஹாரியர் இவி ஃபியர்லெஸ் QWD வேரியண்ட்டில் பெரிய தொடுத்திரை உடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த புதிய வேரியண்ட்டில் ஏகப்பட்ட டிரைவ் மோட்கள் மற்றும் பாதை மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக, அதிக எண்ணிக்கையில் ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஃபியர்லெஸ் QWD வேரியண்ட்டின் அறிமுகத்தின் மூலம், ஏற்கனவே கூறியதுபோல் டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் குறைந்த விலையில் டபுள் மோட்டார் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் செட்-அப்பில் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இது இந்த டாடா எலெக்ட்ரிக் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும்.

கடந்த வெறும் 6 மாதங்களில் மட்டும் சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார்கள் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) செய்யப்பட்டுள்ளன. விற்பனையில் டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காருக்கு மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் காரான இ விட்டாரா (eVitara), ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்கள் போட்டியாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, March 22, 2026, 13:13 [IST]
English summary
Tata harrier ev fearless qwd variant launched price features range all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+