அடுத்த தலைமுறை புதிய ஜீப் காம்பஸ் மாடலின் படங்கள் வெளியீடு

Written By:

ஜீப் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த தலைமுறை புதிய காம்பஸ் மாடலின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜீப் பிராண்டானது அமெரிக்காவின் மிகவும் பாரம்பரியம்மிக்க மாடல்களில் ஒன்றாக உள்ளது. ஜீப் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, பிரேசிலில் திறக்கபட்டது. அப்போது தான், இந்த அடுத்த தலைமுறை ஜீப் காம்பஸ் மாடலின் படங்கள் வெளியிடப்பட்டது.

அடுத்த தலைமுறை புதிய ஜீப் காம்பஸ் மாடல் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தோற்றம்;

தற்போது வெளியாகியுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் படி, புதிய ஜீப் காம்பஸ் மாடல், முந்தைய மாடலை காட்டிலும் சற்று பெரியதாக உள்ளது. புதிய ஜீப் காம்பஸ் மாடலானது, கொஞ்சம் செரோக்கீ, கொஞ்சம் ரெணிகேட் டிஎன்ஏ, கொஞ்சம் கிராண்ட் செரோக்கீ ஆகியவற்றின் கலைவையாக உள்ளது. இந்த புதிய ஜீப் காம்பஸ், ஜீப் நிறுவனம் வழங்கும் 3 தயாரிப்புகளின் கலவையாக உள்ளது.

ஒப்பீடுகள்;

அடுத்த தலைமுறை புதிய ஜீப் காம்பஸ் மாடலின் ரூஃப்லைன் செரோக்கீயின் கிராஸ் ஓவர் லுக் கொண்டுள்ளது. புதிய ஜீப் காம்பஸ் மாடலின் ரியர்-குவார்டர் விண்டோக்கள் மற்றும் பெல்ட்லைன் ரெணிகேட் மாடலின் பிரபாவம் கொண்டுள்ளது. எனினும், புதிய ஜீப் காம்பஸ் மாடலின் முன் பக்கத்தில் உள்ள கிரில் மற்றும் நோஸ், கிராண்ட் செரோக்கீ மாடலின் ஸ்டைல் அம்சங்கள் பெற்றுள்ளது.

சுவாரஸ்யமான அம்சங்கள்;

அடுத்த தலைமுறை புதிய ஜீப் காம்பஸ் மாடல் ஏராளமான சுவாரஸ்யமான அம்சங்கள் கொண்டுள்ளது. இதன் ஃபிரண்ட் மற்றும் ரியரில் நவீன லைட்டிங் உள்ளது. குரோம் ஸ்ட்ரிப் சைட் விண்டோ-விற்கு மேலாக, ரூஃப்லைன் வரை சென்று டி-பில்லர் அருகே சற்று சரிந்து அடுத்த பக்கத்தில் உள்ள டெயில்லைட்கள் வரை செல்கிறது.

இன்டீரியர்;

அடுத்த தலைமுறை புதிய ஜீப் காம்பஸ் மாடல், ஏராளமான அம்சங்கள் கொண்டுள்ளது. இன்டீரியர் படங்கள் படி, புதிய ஜீப் காம்பஸ், 3-ஸ்போக்குகள் உடைய ஸ்டீயரிங், வழக்கமான ஷிஃப்டர் மற்றும் செண்டர் கன்சோலில் பதிக்கப்பட்ட டெர்ரெயின் நாப் கொண்டுள்ளது. மேலும், ஜீப் காம்பஸ், யூகனெக்ட் டச்ஸ்கிரீன், ட்வின்-பேரல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே மற்றும் இதர முனைகளை சுத்தமாக வைத்திருக்கும் சிறிய கம்பார்ட்மெண்ட் ஆகியவை உள்ளது.

பல்வேறு இஞ்ஜின்கள்;

புதிய ஜீப் காம்பஸ் மாடலின் இஞ்ஜினை பொருத்த வரை, சுமார் 100-க்கும் மேலான நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 17 வெவ்வேறு இஞ்ஜின்கள் பொருத்தப்பட்ட மாடல்கள் வழங்கப்படும் என ஜீப் நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்தியாவிற்கான புதிய ஜீப் காம்பஸ் மாடல், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் அல்லது ரெணிகேட் மாடலில் காணப்படும் 2.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வெளியாகும்.

இந்தியாவில் உற்பத்தி;

ஜீப் நிறுவனம் ஏற்கனவே தங்களின் உற்பத்தி ஆலையை நிறுவும் நோக்கில் முதலீடுகள் செய்துள்ளது. ஜீப் நிறுவனம், இந்த புதிய ஜீப் காம்பஸ் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்யலாம். ஜீப் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளுக்கு என வலது-கை டிரைவ் மாடலை தயாரிக்கலாம். மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் வலது-கை டிரைவ் மாடல்கள் பிற வலது-கை டிரைவ் மாடல்கள் விற்கப்படும் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

சமீபத்திய அறிமுகங்கள்;

சமீபத்தில் தான், ஜீப் நிறுவனம், ரேங்க்ளர் அன்லிமிடெட் மற்றும் கிராண்ட் செரோக்கீ ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஜீப் #jeep
English summary
Iconic American brand, Jeep has revealed its next-generation Compass during opening of manufacturing plant in Brazil. Jeep's all-new Compass is slightly larger than outgoing generation model. Jeep's all-new Compass is bit of Cherokee, Grand Cherokee and Renegade DNA to it. Jeep is giving customers blend of these 3 products that Jeep boasts off. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK