லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்கார் இந்தியாவில் அறிமுகம்

Written By:

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த சூப்பர்கார் தயாரிக்கும் நிறுவனமான லம்போர்கினி, விலை உயர்ந்த சூப்பர்கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் தற்போது மிக அரிதான மாடல்களில் ஒன்றான லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்கார் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஹூராகேன் ஆவியோ...

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்கார் தான், இத்தாலியின் லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் ஸ்பெஷல் எடிஷன் சூப்பர்கார் ஆகும்.

ஸ்பெஷல் எடிஷன்;

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்கார், ஸ்பெஷல் எடிஷன் மாடலாக தயாரிக்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலில், அனைத்து சர்வதேச சந்தைகளுக்கும் சேர்த்து 250 கார்கள் தான் தயாரிக்கப்பட உள்ளது.

இஞ்ஜின்;

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்காரில், வழக்கமான ஹூராகேன் மாலில் உள்ள ஹூராகேனின் 5.2 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட், வி10 இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 10 சிலிண்டர்கள் உடைய இந்த இஞ்ஜின், 602 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 560 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்காரின் இஞ்ஜின், 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக தான் 4-சக்கரங்களுக்கும் பவர் மற்றும் டார்கையும் கடத்துகிறது.

செயல்திறன்;

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெறும் 3.2 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்கார், அதிகப்படியாக மணிக்கு 325 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

வண்ணங்கள்;

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்கார், இத்தாலிய விமானப்படைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலிய விமானப்படை அகாடமியின் உடைகளில் காணப்படும் வண்ணங்களான பியர்சென்ட் க்ரிகியோ ஃபால்கோ (pearscent Grigio Falco) மற்றும் மேட் நிறங்களான க்ரிகியோ நிப்பியோ, க்ரிகியோ வல்கேனோ, வெர்டே டர்பைன் (Verde Turbine) மற்றும் ப்ளே க்ரிஃபோ (Ble Grifo) ஆகியவை இந்த லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்காரிலும் காணப்படுகிறது.

மேலும், அனைத்து கார்களிலும், காரின் மத்தியில் இருந்து, காரின் 2 பக்கங்களிலும் ஓடும் மேட் கிரே அல்லது வைட் ஸ்டிரைப்கள் உள்ளன.

புக்கிங்;

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ சூப்பர்கார், 22 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் வெறும் 5 நாட்கள் வரை மட்டுமே இந்த சூப்பர்காரை புக்கிங் செய்து கொள்ளப்படும். அதன் பிறகு, லம்போர்கினி நிறுவனம் இந்த மாடலின் புக்கிங் நிறுத்தப்படும்.

விலை;

லம்போர்கினி ஹூராகேன் ஆவியோ ஸ்பெஷல் எடிஷன் சூப்பர்கார், 3.17 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, September 23, 2016, 12:20 [IST]
English summary
Italian supercar maker Lamborghini launched their special edition Huracan Avio in India. Lamborghini Huracan Avio is the first special edition Lamborghini to be launched in India. Only 250 examples of this Huracan Avio will ever be made. Lamborghini's customers will have five days to order this special edition supercar. It has top speed of 325km/h. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos