மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேன் இந்தியாவில் அறிமுகம்

Written By:

மஹிந்திரா நிறுவனத்தின் இசுப்ரோ எலக்ட்ரிக் வேன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலங்கள் துவங்கிவிட்டது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏதேனும் தயாரிப்புகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் மஹிந்திரா நிறுவனமும், புதிய இசுப்ரோ எலக்ட்ரிக் வேனை அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை, இனி தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா இசுப்ரோ...

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேன், இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்துள்ள 3-வது எலக்ட்ரிக் வாகனம் ஆகும். மஹிந்திரா இசுப்ரோ லைன்-அப் தான் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார்கோ மற்றும் பாசஞ்ஜர் வேன்கள் ஆகும். இவை பூஜ்ஜியம் மாசு உமிழ்வு திறன் கொண்டுள்ளவை ஆகும்.

எலக்ட்ரிக் மோட்டார்;

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேனின் எலக்ட்ரிக் மோட்டார், 200Ah பேட்டரி உடன் இணைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேனின் பாசஞ்ஜர் வேனின் பேட்டரி 112 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டுள்ளது. இதன் கார்கோ வேரியன்ட் 115 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டுள்ளது.

செயல்திறன்;

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேன், 3 ஃபேஸ் இண்டக்ஷன் ஏசி மோட்டார் கொண்டுள்ளது. இந்த மோட்டார், 3,000 ஆர்பிஎம்களில் 33.53 பிஹெச்பியையும், 1,500 ஆர்பிஎம்களில் 90 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேன், ஒரு மணி நேரத்திற்கு அதிகப்படியாக 60 வரைவிலான வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

சார்ஜ்;

15amp பிளக் பாயின்ட் உபயோகிக்கும் பட்சத்தில், மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேனின் பேட்டரி சார்ஜ் ஆக, 8 மணி நேரமும் 45 நிமிடங்களும் ஆகிறது.

பரிமாணங்கள்;

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேன், 3,798 மில்லிமீட்டர் நீளமும், 1,540 மில்லிமீட்டர் அகலமும், 1,920 மில்லிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது. மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேன், 1,920 மில்லிமீட்டர் வீல்பேஸ் மற்றும் 130 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

எடை;

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேனின் கார்கோ வேரியன்ட் 1,280 கிலோகிராம் எடை கொண்டுள்ளது. இதன் பாசஞ்ஜர் வேரியன்ட் 1320 கிலோகிராம் எடை உடையதாகும். இது, கார்கோ வேரியன்ட்டை காட்டிலும் 40 கிலோ கூடுதல் எடை உடையதாகும்.

திறன்;

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேனின் கார்கோ வேரியன்ட் 600 கிலோகிராம் வரையிலான சுமை இழுவை திறன் கொண்டுள்ளது. இதன் பாசஞ்ஜர் வேரியன்ட், சுமார் 8 பயணிகளை சுமந்து செல்ல முடியும்.

டயர்கள்;

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேன், 13-இஞ்ச் வீல்கள் மீது நிலை கொண்டுள்ளது. இதற்கு, 155/80 R13 டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்;

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேனின் முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பு சலுகைகள்;

மஹிந்திரா நிறுவனம், இந்த மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேனுக்கு 2 வருடங்கள் / 40,000 கிலோமீட்டர் வரைவிலான வாரண்டி அளிக்கிறது. மேலும், இதன் பேட்டரி பேக்கிற்கு, மஹிந்திரா நிறுவனம், 3 வருடங்கள் / 40,000 கிலோமீட்டர் வரைவிலான வாரண்டி அளிக்கிறது.

விலை விவரம்;

மஹிந்திரா இசுப்ரோ எலக்ட்ரிக் வேனின் டெல்லி விலை விவரங்கள்;

மஹிந்திரா இசுப்ரோ (கார்கோ) - 8.45 லட்சம் ரூபாய்
மஹிந்திரா இசுப்ரோ (பாசஞ்ஜர்) - 8.75 லட்சம் ரூபாய்

குறிப்பு; இந்த அனைத்து விலை விவரங்களும், ஃபேம் ஸ்கீம் அடிப்படையில் அரசு வழங்கும் சலுகைக்கு பிந்தைய விலை விவரங்கள் ஆகும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has launced its third electric vehicle - eSupro electric van in India. eSupro lineup is India's first zero emission range of all electric cargo and passenger vans. Mahindra is offering 2years/ 40,000km warranty for the electric van itself while the battery pack has a 3 years/ 40,000km warranty. eSupro has top speed of 60km/h. To know more about Mahindra eSupro, check here...
Please Wait while comments are loading...

Latest Photos