மாருதியின் தோனி ஸ்பெஷல் எடிஷன் ஆல்ட்டோ அறிமுகம்

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம், 'எம்எஸ் தோனி இன்ஸ்பையர்ட்' ('MS Dhoni Inspired') ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர். புகழ்பெற்ற பெரும்புள்ளிகளின் பெயரில் சில ஆட்டோமொபைல் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் 'எம்எஸ் தோனி இன்ஸ்பையர்ட்' ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன் தற்போது அறிமுகமாகியுள்ளது.

மாருதி சுஸுகியின் எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன் மாடல் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

எம்எஸ் தோனி...

எம்எஸ் தோனி அல்லது மஹேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக உள்ளார். இவர் தனது ஆக்கிரோஷமான பேட்டிங் மற்றும் திறமையான கீப்பிங் உள்ளிட்ட திறன்களால் மிகவும் புகழ்பெற்றவர்.

திரைப்படம்;

எம்எஸ் தோனியின் நிஜ வாழ்க்கையை மையமாக கொண்டு, 'எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' ('MS Dhoni: The Untold Story') என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput), அனுபம் க்ஹெர், பூமிகா சாவ்லா, கியாரா அத்வானி (Kiara Advani) மற்றும் திஷா பத்தானி (Disha Patani) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரஜ் பாண்டே இந்த படத்தை இயக்க, அருண் பாண்டே மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் இதை தயாரித்துள்ளனர்.

பின்னணி;

'எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம், இந்த செப்டம்பர் 30-ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது. இதன் பின்னணியில், மாருதி சுஸுகியின் எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம், இந்த திரைப்படத்துடன் தங்களை முறைப்படி இணைத்து கொண்டதை அடுத்து, இந்த ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.

அறிமுக விழா;

மாருதி சுஸுகியின் எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன், இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, மாருதி சுஸுகி நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆர்எஸ் கல்சி மற்றும் 'எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்பட குழுவினர் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனை;

மாருதி சுஸுகியின் எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து, மாருதி நிறுவன டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஒற்றுமைகள்;

அசைக்கமுடியாத நம்பிக்கையை பெற்றுள்ள எம்எஸ் தோனி மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நீங்கா புகழ்பெற்ற மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகிய இரண்டிற்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உள்ளன. எம்எஸ் தோனி அவர்கள் 'எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படத்திற்காகவும், மாருதி நிறுவனம் இந்த எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்காக ஒன்றாக இணைந்தது எம்எஸ் தோனி மற்றும் மாருதி நிறுவனம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மையை மேலும் கூட்டுகிறது.

முக்கிய அம்சங்கள்;

மாருதியின் எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன், தோனியின் எண்ணான '7' உடைய ஸ்போர்ட்டியான சீட் கவர்கள், எம்எஸ் தோனியின் சிக்னேச்சர் (கையெழுத்து) உடைய டீகேல்கள் உள்ளன.

மேலும், இந்த எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன் மாடலில் டாப்-என்ட் மியூசிக் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.

பிரச்சாரம்;

மாருதி சுஸுகியின் எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் மற்றும் தோனி இடையில் உருவாக்கியுள்ள புதிய கூட்டு பங்களிப்பு பற்றிய பிரச்சார நடவடிக்கைகள் பல்வேறு சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

கிடைக்கும் மாடல்கள்;

மாருதி சுஸுகியின் எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷன், ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 ஆகிய மாடல்களில் கிடைக்கும்.

மேம்பாடுகள்;

மாருதி சுஸுகியின் எம்எஸ் தோனி ஆல்ட்டோ ஸ்பெஷல் எடிஷனில், ஸ்போர்ட்டியான சீட் கவர்கள், எம்எஸ் தோனியின் சிக்னேச்சர் (கையெழுத்து) உடைய டீகேல்களை தவிர்த்து வேறு எந்த விதமான தொழில்நுட்ப மேம்பாடுகள் அதுவும் செய்யப்படவில்லை.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, September 26, 2016, 13:03 [IST]
English summary
Maruti Suzuki launched MS Dhoni Inspired special edition of their Alto on Saturday in India. This comes in backdrop of India's largest carmaker's association with upcoming movie 'MS Dhoni: The Untold Story' based on life of Cricket legend MS Dhoni. Maruti unveiled this special edition Alto along with Dhoni, movie star cast and RS Kalsi. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos