மாருதி கார் ஷோரூம்களை ஈ போல் மொய்க்கும் மக்கள்! தொழிற்சாலைக்கு ஓய்வே இல்லையா!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த 2026 மார்ச் மாதத்தில் மொத்தம் சுமார் 1.66 லட்சம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது வழக்கத்தை விட அதிகமாக அல்லது குறைவா என்பதையும், ஒவ்வொரு பிரிவு வாரியாக எத்தனை கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது என்பதையும் பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்குகிறது. இது நடந்து முடிந்த மார்ச் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ள 1 லட்சத்து 66 ஆயிரத்து 219 கார்கள் வழக்கத்தை விட அதிகமாகும்.

maruti suzuki car sales

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2025ஆம் ஆண்டில் இதே மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 743 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்து இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 15 ஆயிரத்து 476 கார்களை கூடுதலாக விற்பனை செய்துள்ளது. அதேபோல், இந்த 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் 5,219 கார்கள் குறைவாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 743 கார்களை மட்டுமே இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ள 1,66,219 கார்கள் கூட இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமே ஆகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுஸுகி கார்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 40 ஆகும். அதுவே 2025 மார்ச்சில் 32 ஆயிரத்து 968 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

maruti suzuki car sales

இவை மட்டுமின்றி, 8 ஆயிரத்து 783 கார்களை கூட்டணி நிறுவனமான டொயோட்டா (Toyota)-விற்கு விற்பனை செய்துள்ளது. இது 2025 மார்ச்சில் 6 ஆயிரத்து 882 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது. மாருதி சுஸுகியில் இருந்து ஒரேயொரு கமர்ஷியல் வாகனமாக விற்பனை செய்யப்படும் சூப்பர் கேரி (Super Carry) கடந்த மாதத்தில் 3 ஆயிரத்து 209 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2025 மார்ச்சில் 2,391 சூப்பர் கேரி வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஒட்டுமொத்தமாக, கடந்த மார்ச் என்கிற ஒரு மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 25 ஆயிரத்து 251 வாகனங்களை மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2025ஆம் ஆண்டு மார்ச்சில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 984 வாகனங்களாக மட்டுமே பதிவாகி இருந்தது.

இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகியின் வாகனங்கள் விற்பனை ஆனது 16.72% அதிகரித்துள்ளது. கார்கள் பிரிவு வாரியாக பார்த்தோமேயானால், மாருதி சுஸுகியின் மினி (Mini) கார்களாக விளங்கும் ஆல்டோ (Alto) மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ (S-Presso) என இரண்டும் சேர்த்து கடந்த மாதத்தில் 11 ஆயிரத்து 741 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பலேனோ (Baleno), டிசைர் (Dzire), இக்னிஸ் (Ignis), ஸ்விஃப்ட் (Swift) மற்றும் வேகன்ஆர் (WagonR) கார்கள் அடங்கிய மாருதி சுஸுகியின் காம்பாக்ட் கார்கள் பிரிவில் மொத்தம் 71 ஆயிரத்து 789 கார்களும், பிரெஸ்ஸா (Brezza), எர்டிகா (Ertiga), ஃபிரான்க்ஸ் (Fronx), கிராண்ட் விட்டாரா (Grand Vitara), இன்விக்டோ (Invicto), ஜிம்னி (Jimny) மற்றும் எக்ஸ்.எல்6 (XL6) உள்ளிட்டவை அடங்கிய எஸ்யூவி/எம்பிவி கார்கள் பிரிவில் இருந்து 71 ஆயிரத்து 356 கார்களும் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி மாதத்திற்கு மாதம் தொடர்ந்து வளர்ந்துக் கொண்டே செல்கிறது. உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதி, டொயோட்டா நிறுவனத்திற்கு விற்பனை செய்வது என அனைத்து பிரிவுகளிலும் மாருதி சுஸுகியின் முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது. இது இப்போது அல்ல... கடந்த ஒரு வருடமாகவே ஏற்பட்டுவரும் முன்னேற்றம் என்றே சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 2, 2026, 10:45 [IST]
English summary
Maruti suzuki sold 166219 cars in march 2026 check all details here
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+