1 லட்சம் பலேனோ கார்களை விற்று மாருதி நிறுவனம் சாதனை

By Ravichandran

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா லிமிட்டெட் (எம்எஸ்ஐஎல்), இந்தியாவில் 1 லட்சம் பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மாருதி நிறுவனம், நீண்ட காலமாகவே, இந்தியாவில் முன்னோடி கார் உற்பத்தி நிறுவனமாக உள்ளது.

மாருதி நிறுவனம் படைத்த இந்த சமீபத்திய சாதனை தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

மாருதி சுஸுகி பலேனோ ஹேட்ச்பேக், இந்தியாவில் அக்டோபர் 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல், இது இந்தியாவில், இந்த செக்மென்ட்டில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்றுமதி;

ஏற்றுமதி;

இந்தியாவில் மட்டும், 1 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்ததோடு மட்டுமல்லாமல், ஜப்பான் மற்றும் மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு, 33,800 பலேனோ ஹேட்ச்பேக் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது.

குவியும் புக்கிங்;

குவியும் புக்கிங்;

இதுவரை, 1 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்யப்பட்டத்தை சேர்க்காமல், ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த கார்களை புக்கிங் செய்துவிட்டு, கார்களின் டெலிவரிக்காக காத்துக்கிடக்கின்றனர். இதன் டெலிவரி அடுத்த சில மாதங்களுக்குள் செய்து முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

சமீபத்தில் மத்திய அரசு துவங்கிய மேக்-இன்-இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக, மாருதி பலேனோ ஹேட்ச்பேக் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்த பிரிமியம் ஹேட்ச்பேக் தான், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாடல் ஆகும்.

கூடும் ஏற்றுமதி;

கூடும் ஏற்றுமதி;

மாருதி பலேனோ ஹேட்ச்பேக், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லத்தின் அமேரிக்கா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உயர்அதிகாரி கருத்து - 1;

உயர்அதிகாரி கருத்து - 1;

மாருதி நிறுவனத்தின் இந்த அபார சாதனை குறித்து, மாருதி நிறுவன உயர்அதிகாரி ஆர்.எஸ்.கல்சி மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார். மேலும், பலேனோ ஹேட்ச்பேக், இந்திய ஆட்டோமொபைல் துரையின் ஒரு வெற்றி சரித்திரமாக மாறியுள்ளது. பலேனோ ஹேட்ச்பேக் புதிய டிசைன் சித்தாந்தம் கொண்டுள்ளது. இது, இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட பல்வேறு டாப்-என்ட் அம்சங்களை கொண்டுள்ளது" என தெரவித்தார்.

உயர்அதிகாரி கருத்து - 2;

உயர்அதிகாரி கருத்து - 2;

கூடுதலாக, "மாருதி இஞ்ஜினியர்கள், இந்த பலேனோ ஹேட்ச்பேக், புதிய ஃபிளாட்பாரம் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். பலேனோ ஹேட்ச்பேக், மேம்பட்ட ரைட் மற்றும் ஹேண்ட்லிங், இதன் கிளாஸ்ஸில் சிறந்த மைலேஜ் அளிக்கிறது. இதன் செக்மென்ட்டில் முதல் முறையாக, டியூவல் ஏர்பேக்குகள், இபிடி உடைய ஏபிஎஸ், உள்ளிட்ட அம்சங்கள் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக வழங்கப்படுகிறது. இது, நிஜமாகவே சிறந்த மேக்-இன்-இந்தியா தயாரிப்பாக உள்ளது" என ஆர்.எஸ்.கல்சி கூறினார்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

12 மணிநேரத்தில் டெல்லி- மும்பை... கனவை சாத்தியமாக்கிய டால்கோ ரயில்!

இதுதான் இந்தியாவின் பவர்ஃபுல் ஹூண்டாய் க்ரெட்டா கார்!

உலகின் மிக நீண்ட பயண நேர நான் - ஸ்டாப் விமான சேவையை துவங்கும் காந்தாஸ்!

Most Read Articles
English summary
India's leading car manufacturer Maruti Suzuki India Limited (MSIL) have sold one lakh units of its Baleno premium hatchback in India. Apart from this domestic sales, 33,800 Baleno's have been exported to Japan, Europe Australia, Latin America, New Zealand and more than 100 international markets. Safety features like dual airbags and ABS with EBD are standard in Baleno. To know more, check here...
Story first published: Wednesday, October 5, 2016, 19:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X