மாருதி சுஸுகி இக்னிஸ் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் இக்னிஸ் காம்பேக்ட் கிராஸ்ஓவர் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான தயாரிப்புகளுக்கு, இந்தியாவில் பலத்த வரவேற்பு உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக மாருதி சுஸுகி இக்னிஸ் காரை அறிமுகம் செய்ய உள்ளது.

மாருதி சுஸுகி இக்னிஸ் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மாருதி சுஸுகி இக்னிஸ்...

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் இக்னிஸ், மைக்ரோ எஸ்யூவி செக்மென்ட்டை சேர்ந்ததாகும். இக்னிஸ் தான் இந்நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் கிராஸ்ஓவர் கார் ஆகும்.

முக்கிய அம்சங்கள்;

மாருதி சுஸுகி இக்னிஸ், நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. மேலும், இந்தியாவிற்கான மாடலில் 4டபுள்யூடி எனப்படும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

ஸ்பை படங்கள்;

பெரும்பாலான கார்கள், அறிமுகம் செய்யப்படுவதற்கு முன், அதன் சோதனைகள் மேற்கொள்ளபடுவது வழக்கம். இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது, எடுக்கப்படும் ஸ்பை படங்களும் அவ்வப்போது வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.

அவ்வாறு, மாருதி சுஸுகி இக்னிஸ் மாடலின் சோதனைகள் டெல்லியில் மேற்கொள்ளப்படும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இஞ்ஜின்;

மாருதி சுஸுகி இக்னிஸ் மாடல், 1.2 லிட்டர் விடிவிடி பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கலாம். மாருதி சுஸுகி நிறுவனம், இக்னிஸ் மாடலை, புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரான்ஸ்மிஷன்;

மாருதி சுஸுகி இக்னிஸ் மாடலின் டீசல் இஞ்ஜின், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிமாணங்கள்;

மாருதி சுஸுகி இக்னிஸ், 3,700 மில்லிமீட்டர் நீளமும், 1,660 மில்லிமீட்டர் அகலமும், 1,595 மில்லிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது. மேலும், மாருதி சுஸுகி இக்னிஸ், 2,435 மில்லிமீட்டர் அளவிலான வீல் பேஸ் மற்றும் 180 மில்லிமீட்டர் அளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

மாருதி சுஸுகி இக்னிஸ் மாடல், இபிடி உடைய ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்-பேக்குகள், ஹில் டிஸ்சென்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடியோ சிஸ்டம்;

இக்னிஸ் தான் மாருதி சுஸுகி நிறுவன தயாரிப்புகளில் முதல் முறையாக ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் கொண்டிருக்கும். இனி வரும் அனைத்து மாருதி நிறுவன தயாரிப்புகளும் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்;

மாருதி சுஸுகி இக்னிஸ், தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களுக்கு நெருக்கத்தில் அறிமுகம் செய்யப்படும்.

போட்டி;

மாருதி சுஸுகி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இந்த ஸ்பை வீடியோ மேக்ராஜ் சிங் (Meghraj Singh) என்ற யூடியூப் பயனரால் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது..

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Wednesday, September 21, 2016, 7:03 [IST]
English summary
Ignis, first compact crossover from Maruti Suzuki is preparing for launch and is expected in launch October 2016. Ahead of launch, Ignis was caught testing in Delhi. Ignis comes under micro-SUV segment, in which its competes up against Mahindra KUV100. Ignis will be first Maruti Suzuki car in India, which comes with Harmon Cardon audio system. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos