மாருதி சுஸுகி இக்னிஸ் மினி எஸ்யூவி 2017-ல் அறிமுகம்

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் மாருதி சுஸுகி இக்னிஸ் மினி எஸ்யூவி, 2017-ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது. மாருதி சுஸுகி இக்னிஸ் முதன் முதலாக 2016-டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது முதல் இது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மாருதி சுஸுகி இக்னிஸ் மினி எஸ்யூவியின் அறிமுகம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்கள்;

இஞ்ஜின்கள்;

மாருதி சுஸுகி இக்னிஸ் மினி எஸ்யூவி, 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 தேர்வுகளில் வெளியாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதி சுஸுகி இக்னிஸ் மினி எஸ்யூவியின் 2 இஞ்ஜின் தேர்வுகளும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகிய இரண்டு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடனும் கிடைக்கும்.

தொழில்நுட்ப தகவல்கள்;

தொழில்நுட்ப தகவல்கள்;

மாருதி சுஸுகி நிறுவனம், இந்த இக்னிஸ் மினி எஸ்யூவியின் செயல்திறன் மற்றும் இதர முக்கிய தகவல்களை வெளியிடவில்லை.

தாமதாகும் அறிமுகம்;

தாமதாகும் அறிமுகம்;

மாருதி சுஸுகி நிறுவனம், இந்த இக்னிஸ் மினி எஸ்யூவியை முன்னதாகவே அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. எனினும், தற்போதைய நிலையில் மாருதி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் காத்திருப்பு காலத்தை குறைக்கும் முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. இதனாலும், மாருதி சுஸுகி இக்னிஸ் மினி எஸ்யூவியின் அறிமுகம் தாமதம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெக்ஸா;

நெக்ஸா;

மாருதி சுஸுகி இக்னிஸ் மினி எஸ்யூவி, அனேகமாக நெக்ஸா விற்பனை மையங்கள் மூலமாக தான் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், எஸ்-கிராஸ் மற்றும் பலேனோ மாடல்கள் மட்டுமே நெக்ஸா விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

போட்டி;

போட்டி;

பிரிமியம் மாடலான மாருதி சுஸுகி இக்னிஸ் மினி எஸ்யூவி, மஹிந்திரா கேயூவி1OO மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

நூற்றாண்டு கொண்டாடும் போயிங் விமான நிறுவனம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

கார்களை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேக விரைவு சரக்கு ரயில் அறிமுகம்!

விமானம், சூப்பர்காரை தொடர்ந்து இப்போது கபாலி பஸ்... ரவுண்டு கட்டும் விளம்பரங்கள்!

Most Read Articles
English summary
Maruti Ignis Mini-SUV is most likely to be launched in India during early 2017. Under the hood of Maruti Suzuki Ignis will be 1.2-litre petrol and 1.3-litre diesel engine option. Both engines are likely to be mated to manual and AMT gearboxes. Ignis mini-SUV is most likely to be sold through Maruti Suzuki's all-new NEXA outlets. To know more about Maruti Suzuki Ignis, check here...
Story first published: Monday, October 10, 2016, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X