குண்டு துளைக்காத புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் லிமோஸின் படங்கள் ரிலீஸ்

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் குண்டு துளைக்காத புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் லிமோஸின் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்காலத்தில், சொகுசு கார்களின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கங்களுக்கு குறைபாடே இல்லை. வெவ்வேறு விலைககளுக்கே ஏற்ப ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சொகுசு கார்களை உருவாக்கி கொண்டே இருக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் லிமோஸின் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட்...

மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட்...

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம், மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் காரை முறைப்படி, 2016 பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், இதன் படங்கள், அதற்கு முன்னதாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆயுதங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வசதி கொண்டுள்ளது.

வீல்பேஸ்;

வீல்பேஸ்;

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட், 6,500 மில்லிமீட்டர் நீளமும், 4418 மில்லிமீட்டர் அளவிலான நீண்ட வீல்பேஸ் கொண்டுள்ளது. எஸ் கிளாஸ் காரைவிட மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் காரின் வீல்பேஸ் அதிகமாக உள்ளது.

எடை;

எடை;

ஆயுதங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வசதி கொண்ட கவசம் கொண்டுள்ளதால், புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட், 5.6 டன் எடை கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட், ட்வின்-டர்போ, 6.0 லிட்டர், வி12 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 522 பிஹெச்பியையும், 830 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

வேகம்;

வேகம்;

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட், அசாதாரண எடை கொண்டுள்ளதால், இது அதிகப்படியாக மணிக்கு 160 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை மட்டுமே எட்டும் திறன் கொண்டுள்ளது.

குண்டு துளைக்காத கார்;

குண்டு துளைக்காத கார்;

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் மாடலின் இத்தகைய கூடுதல் எடைக்கு காரணங்கள் உள்ளன. இது விஆர்9 பேல்லிஸ்டிக் பாதுகாப்பு கொண்டுள்ளது. இது அசால்ட் ரைஃபிள் போன்றவற்றை கொண்டு தாக்குதல்கள் நடத்தினாலும், இந்த காரின் உள்ளே இருப்பவர்களுக்கு ஒன்றும் ஆகாது.

இஆர்வி 2010 புரொடெக்ஷன்;

இஆர்வி 2010 புரொடெக்ஷன்;

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட், டைரக்டிவ் இஆர்வி 2010 புரொடெக்ஷன் கொண்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், 2 மீட்டர் அரூரில் இருந்து 15 கிலோகிராம் எடையுள்ள டிஎன்டி கொண்டு தாக்குதல் நடத்தினாலும், இந்த காரில் உள்ளவர்களுக்கு, எந்த ஆபத்தும் நேராது.

புல்லட் ப்ரூஃப்;

புல்லட் ப்ரூஃப்;

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட், புல்லட் ப்ரூஃப் மற்றும் பாம் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது. இந்த அளவிற்கு, இதை வலுவானதாக ஆக்க, இதன் பாடி பகுதிகளுக்கு இடையே கேவிட்டிகளில் மற்றும் வெளிப்புற பகுதியில் ஸ்டீல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்பிலின்டர் பாதுகாப்பு அளிக்கும் வகையில், இதன் எக்ஸ்டீரியரில் அரமிட் மற்றும் பிஇ கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜன்னல்;

ஜன்னல்;

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் மாடலின் ஜன்னல்களுக்கு, பாலிகார்பனேட் பூச்சு வழங்கப்பட்டுள்ளது. இதன் பின் ஜன்னலுக்கு எந்த கவசமும் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளை பாதுகாக்கும் விதமாக ரியர் சீட்களுக்கு பின்னால், ஸ்டீல் பல்க்ஹெட் பொருத்தப்பட்டுள்ளது.

இதர வசதிகள்;

இதர வசதிகள்;

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் மாடலில், உச்சகட்ட சொகுசை உணரும் வகையில், மசாஜ் வசதி கொண்ட எக்சிகியூட்டிவ் சீட்கள் இருக்கிறது. மேலும், இதில் 18.5 அளவிலான டிஸ்பிளே உள்ளது.

தேர்வு முறையிலான அம்சங்கள்;

தேர்வு முறையிலான அம்சங்கள்;

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் மாடலில், சைரன்கள், பிளாஷிங் லேம்ப்கள், 2-வழி ரேடியோ, எமர்ஜென்சி ஸ்டார்ட்டர் பேட்டரி, எக்ஸ்டர்னல் கம்யூனிகேஷன் சிஸ்டம் (லவுட் ஸ்பீக்கர் / மைக்ரோஃபோன்) உள்ளிட்ட வசதிகள் தேர்வு முறையில் வழங்கப்படுகிறது.

விலை;

விலை;

இத்தகைய அளவில்லா பாதுகாப்பு வசதிகள் உடைய புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 புல்மேன் கார்ட் மாடல், 1.4 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் 10.45 கோடி ரூபாய்) என்ற விலையில் விற்கப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சொகுசு அம்சங்களின் உச்சம்... மெர்சிடிஸ் மேபக் புல்மேன் கார் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் - மேபக் பிராண்டின் ஆடம்பர கார்!!

குண்டு துளைக்காத மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார்டு இந்தியாவில் அறிமுகம்

Most Read Articles
English summary
German carmaker Mercedes-Benz has unveiled their range topping New Maybach S600 Pullman Guard armoured limousine ahead of its official debut at 2016 Paris Motor Show. This armoured limo weighs in at massive 5.6 tons. Maybach S600 Pullman Guard boasts of VR9 ballistic protection. Price of New Maybach S600 Pullman Guard is 1.4 million euros (Rs. 10.45 crore). To know more, check here...
Story first published: Friday, September 23, 2016, 19:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X