புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் புதிய எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தொடர் பண்டிகை கால கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய எட்டியோஸ் பிளாட்டினம்...

புதிய எட்டியோஸ் பிளாட்டினம்...

பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்ட டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எட்டியோஸ் காம்பேக்ட் செடான், எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான், முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும் சுமார் 20,000 ரூபாய் குறைவான விலை கொண்டதாக இருக்கும்.

கூட்டாக விற்பனை;

கூட்டாக விற்பனை;

புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான், முந்தைய தலைமுறை மாடலுடன் ஒன்றாக தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகும். இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.4-லிட்டர்டீசல் இஞ்ஜின் ஆகியவற்றில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடானின் 2 இஞ்ஜின்களும், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கைப்பட்டிருக்கும்.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடானின் ஃபிரன்ட் பம்பர் மற்றும் கிரில் கூடுதல் ஆக்கிரோஷமானதாகவும், கூர்மையானதாகவும் உள்ளது. இதனால் இதன் ஸ்போர்ட்டிதன்மை கூடியுள்ளது.

இந்த புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் மாடலுக்கு ஸ்போர்ட்டியான அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டெயில்லைட்கள் மற்றும் ரியர் பகுதியில் சிறிய சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடானின் உட்புறத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்பீடோமீட்டர் மற்றும் டேக்கொமீட்டர் உள்ளிட்டவை தொடர்ந்து மையப்பகுதியிலேயே மவுன்ட் செய்யப்பட்டுள்ளது.

குறைந்த அளவிலான சாலை சத்தம் மற்றும் குறைவான இஞ்ஜின் சத்தம் மட்டுமே கேபினில் நுழையும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டொயோட்டா இஞ்ஜினியர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை;

விலை;

புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக்கின் விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டாண்டர்ட் எட்டியோஸ் பிளாட்டினம் (பெட்ரோல்) - 6.43 லட்சம் ரூபாய்

ஸ்டாண்டர்ட் எட்டியோஸ் பிளாட்டினம் (டீசல்) - 7.56 லட்சம் ரூபாய்

டிஎல்எக்ஸ் எட்டியோஸ் பிளாட்டினம் (பெட்ரோல்) - 6.83 லட்சம் ரூபாய்

டிஎல்எக்ஸ் எட்டியோஸ் பிளாட்டினம் (டீசல்) - 7.96 லட்சம் ரூபாய்

ஹை எட்டியோஸ் பிளாட்டினம் (பெட்ரோல்) - 7.17 லட்சம் ரூபாய்

ஹை எட்டியோஸ் பிளாட்டினம் (டீசல்) - 8.30 லட்சம் ரூபாய்

பிரிமியம் எட்டியோஸ் பிளாட்டினம் (பெட்ரோல்) - 7.74 லட்சம் ரூபாய்

பிரிமியம் எட்டியோஸ் பிளாட்டினம் (டீசல்) - 8.87 லட்சம் ரூபாய்

குறிப்பு;

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் மும்பை விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் செடான் பிரேசிலில் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா?

புதிய இன்னோவாவை தனி நபர் விமானத்திற்கு இணையாக மாற்றிய டிசி டிசைன்!

புதிய டொயோட்டா எட்டியோஸ் பண்டிகை காலத்தின் போது இந்தியாவில் அறிமுகம்

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motors has launched their all-new Etios Platinum compact sedan in India. Etios compact sedan has been renamed as Etios Platinum by Toyota Motors India. Etios Platinum will be available pan India alongside Etios Platinum sold in India previously. Both petrol and diesel engine options are available with new Toyota Etios Platinum. To know more, check here...
Story first published: Wednesday, September 14, 2016, 15:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X