க்விட்டை போல் மற்றொரு காரை அறிமுகம் செய்யும் ரெனோ

By Ravichandran

ரெனோ இந்தியா நிறுவனம், க்விட்டை போல் மற்றொரு காரை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. எந்த சந்தைகளிலுமே ஏதாவது ஒரு ஆட்டோமொபைல் தயாரிப்பு, வெற்றிகரமாக விற்பனை ஆனால், அதி போல், மேலும் சில தராரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அத்தகைய முறையில், ரெனோ நிறுவனமும், க்விட்டை போல் மற்றொரு காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ரெனோ நிறுவனத்தின் வருங்கால திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

வெற்றிகரமான மாடல்கள்;

வெற்றிகரமான மாடல்கள்;

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம், இந்தியாவில் தடம் பத்திது 4 ஆண்டுகள் ஆகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றில், டஸ்ட்டர் மற்றும் க்விட் மிகவும் புகழ்பெற்ற மாடல்களாக விளங்கி வருகிறது.

இலக்கு;

இலக்கு;

ரெனோ நிறுவனத்தின் டஸ்ட்டர் மற்றும் க்விட் சக்கைபோடு போட்டு வரும் நிலையில், இந்த வருடத்தின் நிறைவுக்குள் 1,00,000 கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்ட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.

அபார விற்பனை;

அபார விற்பனை;

2016-ஆம் ஆண்டில், ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், ரெனோ நிறுவனம் இந்திய வாகன சந்தைகளில் ஒட்டுமொத்தமாக 87,000 கார்களை விற்பனை செய்தது. இதில் 65,000 கார்கள் க்விட் மாடலை சேர்ந்ததாகும்.

ஆனால், ரெனோ இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டில், 50,000 கார்களை மட்டுமே விற்பனை செய்தது. இந்த விற்பனை அளவுகளை ஒப்பிடுகையில், 2016-ஆம் ஆண்டு ரெனோ நிறுவனத்திற்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாகவே விளங்கி வருகிறது.

எம்டி கருத்து;

எம்டி கருத்து;

வரும் ஆண்டுகளில், ரெனோ நிறுவனம், இந்திய வாகன சந்தைகளை எப்படி அணுக உள்ளது என்பது குறித்து சில முக்கியமான தகவல்களை, ரெனோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்டி சுமீத் சாஹ்னி தெரிவித்தார்.

"ரெனோ இந்தியா நிறுவனம், 2017 முதல் இனி ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது ஒரு மாடலையாவது அறிமுகம் செய்ய உள்ளது. க்விட் ஹேட்ச்பேக், இந்திய வாகன சந்தைகளில் மிக அதிகமாக விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில், சிறிய கார்கள் செக்மென்ட்டில் அமோகமான சந்தை மதிப்பு உள்ளதால், க்விட் போன்ற சிறிய கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும்" என சுமீத் சாஹ்னி கூறினார்.

உற்பத்தி;

உற்பத்தி;

ரெனோ க்விட், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரேசில், ரெனோ க்விட் தயாரிக்கப்படும் 2-வது நாடாக உள்ளது. நுழைவு நிலை ஹேட்ச்பேக்கான ரெனோ க்விட், பிரேசிலில் உற்பத்தி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அங்கு விற்பனையும் செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதிக்கு க்விட் மூலம் சவால் விடுக்கும் ரெனோ - முழு விவரம்

ரெனோ நிறுவனத்தின் 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள், 2017-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம்

ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault India has seen two very successful products in four years of existence in India — Duster and Kwid. French carmaker is aiming to finish this calendar year with its sales crossing one lakh mark+. Renault India feels that, there is huge opportunity in small car segment. Hence, another Kwid type Car can be introduced in Entry level segment. To know more, check here...
Story first published: Friday, September 16, 2016, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X