ரெனோ கார்களின் விலை விரைவில் உயர உள்ளது

Written By:

ரெனோ நிறுவனம், தங்களின் கார்களின் விலைகளை விரைவில் உயர்த்த உள்ளது. சமீப் காலமாக, கார் நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தங்கள் கார்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில், ரெனோ நிறுவனமும் கார்களின் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

ரெனோ நிறுவனம் செய்யும் இந்த விலையேற்ற நடவடிக்கை தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

காரணம்...

உள்ளீட்டு பொருட்களின் விலையேற்றத்தை காரணம் காட்டி, ஹூண்டாய் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலைகளை உயர்த்தியது. இதே காரணத்தை மேற்கோள் காட்டி, ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம், தங்களின் கார்களின் விலைகளை உயர்த்த உள்ளது.

விலையேற்ற விகிதம்;

எனினும், இந்த விலை உயர்வு கடுமையாக இருக்குமோ என அஞ்ச வேண்டாம். தற்போதைய விற்பனை விலையில் இருந்து 1% முதல் 2% வரையில் மட்டுமே இந்த விலை உயர்வு இருக்க வாய்ப்புகள் உள்ளது.

எம்டி கருத்து;

இந்த விலையேற்றம் தொடர்பான தகவல்களுக்கு, ரெனோ நிறுவனத்தின் சிஇஒ மற்றும் எம்டி சுமித் சாஹ்னி சில முக்கியமான விளக்கங்களை அளித்தார். அப்போது, கார்கள் தயாரிப்பதற்கு தேவையான உள்ளீட்டு பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டே இருக்கிறது. இதனால், கார்கள் தயாரிக்கும் செலவுகளும் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆம், நாங்கள் கார்களின் விலைகளை உயர்த்த உள்ளோம். ஆனால், இந்த நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்வது என்று ஆராய்ந்து வருகிறோம்" என சுமித் சாஹ்னி தெரிவித்தார்.

இந்தியாவில் விற்கப்படும் மாடல்கள்;

ரெனோ நிறுவனம், தற்போதைய நிலையில், க்விட், பல்ஸ் ஹேட்ச்பேக், லாட்ஜி எம்பிவி மற்றும் டஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை ரேஞ்ச்;

ரெனோ நிறுவனம், இந்தியாவில் விற்கும் தயாரிப்புகளில் மிகவும் விலை குறைவானது க்விட் மாடல் ஆகும் இதன் ஆரம்ப விலை 2,64,734 ரூபாயாக உள்ளது. ரெனோ டஸ்ட்டர் மாடலின் டாப் என்ட் வேரியன்ட்டின் விலை 13,77,855 லட்சம் ரூபாயாக உள்ளது.

பிற நிறுவனங்களின் விலையேற்றம்;

ரெனோ நிறுவனத்திற்கு முன்னதாக, ஹூண்டாய், மாருதி சுஸுகி, மஹிந்திரா ஆகிய கார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தின. மற்றொரு இந்திய கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தங்கள் கார்களின் விலைகளை விரைவில் உயர்த்த உள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ரெனோ #renault
English summary
French carmaker Renault is set to increase prices of its entire model range in India to help combat rising input costs following likes of Maruti-Suzuki and Hyundai. Price hike is not expected to be severe, with hike said to be around 1-2 percent of current cost of vehicles on sale. Renault is currently evaluating the period as when to undertake pricehike. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos