புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி 2016 பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம்

Written By:

ஸ்கோடா நிறுவனம் தங்களின் புதிய கோடியாக் எஸ்யூவியை 2016 பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்துள்ளது. செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் தான் இந்த கோடியாக் எஸ்யூவியை தயாரிக்கிறது. இந்த கோடியாக் சற்று பெரிய எஸ்யூவியாக உள்ளது. சமீபகாலமாக, இந்த ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் வெளியாகி வந்தது. தற்போது, இந்த மாடல், 2016 பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

தோற்றம்;

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, தாராளமான இட வசதி, பிரத்யேக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களிடம் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை உருவாக்கிய மாடல் ஆக உள்ளது. இந்த கோடியாக், யெட்டி மாடலை காட்டிலும், கூடுதல் ஆங்குலார் தோற்றம் மற்றும் திடத்தன்மை கொண்டுள்ளது.

சீட் அமைப்புகள்;

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் லேஅவுட்-டுடன் கிடைக்கிறது. இந்த செக்மென்ட்டில், கோடியாக் எஸ்யூவி மட்டுமே மூன்றாம் வரிசை சீட் அமைப்பு கொண்டுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவிக்கிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

ஸ்கோடா நிறுவனம், இந்த புதிய கோடியாக் எஸ்யூவியை, 2 டீசல் இஞ்ஜின்கள் மற்றும் 3 பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுகளில் வழங்குகின்றனர்.

டீசல்இஞ்ஜின் திறன்;

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின், 4-சிலிண்டர்கள் உடைய 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின், 2 விதமான டியூனிங்கில் கிடைக்கிறது. முதல் டியூனிங்கில் இந்த இஞ்ஜின் 148 பிஹெச்பியையும், 340 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

பெட்ரோல் இஞ்ஜின் - 1;

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜினுடன் வெளியாகிறது. முதல் டியூனிங்கில் இந்த இஞ்ஜின் 148 பிஹெச்பியையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

பெட்ரோல் இஞ்ஜின் - 2;

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 177 பிஹெச்பியையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ் பொருத்த வரை, டாப்-என்ட் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட மாடல்கள், 4டபுள்யூடி எனப்படும் 4 வீல் டிரைவ் மற்றும் 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொண்டிருக்கும். மிதமான டீசல் மற்றும் மற்றும் 1.4 லிட்டர் இஞ்ஜின்கள் எஃப்டபுள்யூடி எனப்படும் ஃபிரண்ட் வீல் டிரைவ் டிஎஸ்ஜி மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும். திறன்மிக்க 148 பிஹெச்பியை வெளியிடும் 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், ஃபிரண்ட் வீல் டிரைவ் டிஎஸ்ஜி மற்றும் 6-ஸ்பீட் டிஎஸ்ஜி அல்லது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும். நுழைவு நிலை பெட்ரோல் இஞ்ஜின் மட்டும் ஃபிரண்ட் வீல் டிரைவ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும்.

செயல்திறன்;

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் அதிக திறன்மிக்க டீசல் இஞ்ஜின், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.6 நொடிகளில் எட்டிவிடும் என்று ஸ்கோடா தெரிவிக்கிறது. இதன் அதிக திறன்மிக்க பெட்ரோல் இஞ்ஜின், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.8 நொடிகளில் எட்டிவிடும் என்று ஸ்கோடா கூறுகிறது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு பொருத்தவரை, புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, 8-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடேயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான இண்டக்டிவ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு பொருத்த வரை, புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, டோ அசிஸ்ட், சர்ரவுண்ட்-வியூ கேமராக்கள், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், சிட்டி எமெர்ஜென்சி பிரேக்கிங் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

அறிமுகம்;

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது.

போட்டி;

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, ஹூண்டாய் சான்ட்டா பீ மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda unveiled its large SUV Kodiaq at 2016 Paris Motor Show. This new SUV from Skoda will be offered with options of five seater or seven seater layouts. Skoda says, it is the only SUV in its segment which provides third row seating option. New Kodiak looks more stronger and angular compared Yeti. To know more about Skoda's Exclusive SUV ‘Kodiaq’, check here..
Please Wait while comments are loading...

Latest Photos