ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடலின் அறிமுகம் தாமதமாகும்

By Ravichandran

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அமியோ டீசல் செடானின் அறிமுகம், தாமதமாகும் என செய்திகள் வெளியாகிறது. ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், 'மேட் இன் இந்தியா' எனப்படும் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் அமியோவின் பெட்ரோல் மாடலை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தனர். இதையடுத்து, டீசல் மாடலும் அறிமுகம் செய்யப்படுவதாக உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல் மாடல் மற்றும் அதன் அறிமுகம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

டீசல் மாடல்;

டீசல் மாடல்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் பெட்ரோல் மாடல், இந்த ஜூன் மாதம் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டீசல் மாடல், கடந்த சில தினங்களுக்கு முன் செப்டம்பர் 27-ல் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், இதன் அறிமுகம் தள்ளி போகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த டீசல் செடான், போலோ மாடல் வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடலின் பெரும்பாலான அம்சங்கள், பெட்ரோல் மாடலின் டிசைன் அம்சங்களை போலவே இருக்கிறது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், ட்ரென்ட்லைன், கம்ஃபர்ட்லைன் மற்றும் ஹைலைன் ஆகிய 3 வேரியன்ட்களில் அறிமுகமாகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், 4 சிலிண்டர்கள், டர்போசார்ஜர் உடைய 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின், 110 பிஹெச்பியையும், அதிகப்படியாக 230 என்எம் - 250 என்எம் டார்க் வரையிலான டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீட் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், குரூஸ் கண்ட்ரோல், டச்ஸ்கிரீன் இன்போஃடேயின்மென்ட் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், ஹோண்டா அமேஸ், மாருதி சுஸுகி ஸ்விப்ட் டிசையர், டாடா போல்ட், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர், ஹூண்டாய் எக்ஸன்ட் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், செப்டம்பர் 27-ல் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், இதன் அறிமுகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் அறிமுகம் எப்போது நடைபெற உள்ளது என்பது குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

விலை;

விலை;

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வேரியன்ட்டை பொருத்து, ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடலின் விலை 6.9 லட்சம் ரூபாய் முதல் 9.5 லட்சம் ரூபாயாக இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நாளை விற்பனைக்கு அறிமுகமாகிறது ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல்?

புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் எப்படி இருக்கிறது... ஒரு ரவுண்டு பார்த்துடலாம்!

சவாலான விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ விற்பனைக்கு வந்தது!

Most Read Articles
English summary
Volkswagen Ameo Diesel Sedan Launch is getting postponed in India. Volkswagen Ameo diesel was to launch in India on 27th September. But, German carmaker has postponed launch of its diesel sedan. It comes in three variants- Trendline, Comfortline and Highline. Regards to Design, Ameo diesel will be identical to its petrol counterpart. To know more, check here...
Story first published: Wednesday, September 28, 2016, 15:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X