ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக் படங்கள் டீஸ் செய்யப்பட்டது

Written By:

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தங்களின் புதிய போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக்கின் படங்களை வெளியிட்டு டீஸ் செய்துள்ளது. இந்தியாவில் தற்போது தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் கோலாகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்நிலையில், ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் டீஸ் செய்துள்ள புதிய போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளல்லாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார்...

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரிக்கும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக்கின் படங்கள், இந்நிறுவனத்தின் அலுவல் ரீதியான இந்திய இணையதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

டெஸ்ட் டிரைவ்;

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக், இந்தியா முழுவதும் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஷோரூம்களில் டெஸ்ட் டிரைவ செய்ய வழங்கப்படுகிறது.

எக்ஸ்டீரியர்;

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக்கின் எக்ஸ்டீரியரில் பி-பிள்ளருக்கு குறுக்கே ஆல்ஸ்டார் பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக்கிற்கு இந்நிறுவனம் புதிய 15-இஞ்ச் டைமன்ட்-கட் அல்லாய் வீல்கள் பொருத்தியுள்ளது.

இன்டீரியர்;

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக்கின் இன்டீரியரில் புதிய செண்டர் ஆர்ம்ரெஸ்ட், புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆல்ஸ்டார் ஸ்கஃப் பிளேட்கள் மற்றும் அலுமினியம் ஃபுட் பெடல்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் என்ற 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ்;

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக்கின் 2 இஞ்ஜின் தேர்வுகளும் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

கிடைக்கும் நிறங்கள்;

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக், தற்போது எந்த வண்ணங்களில் கிடைக்குமோ அவற்றின் படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக் இந்தியாவில், புளூ சில்க், ரிஃப்லெக்ஸ் சில்வர், ஃபிளாஷ் ரெட், கேண்டி வைட் மற்றும் டாஃப்ஃபி பிரவுன் ஆகிய 5 நிறங்களில் விரைவில் விற்பனைக்கு கிடைக்கும்.

அறிமுகம்;

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக்கின் அறிமுக தேதி பற்றி தெளிவான தகவல்கள் எதுவும் இதுவர வெளியிடப்படவில்லை. இது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை;

இந்த நேரத்தில், புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் ஹேட்ச்பேக்கின் விலைகள் வெளியிடப்படவில்லை. எனினும், இதன் விலைகள், ஸ்டாண்டர்ட் போலோ ஹைலைன் ட்ரிம் தேர்வை காட்டிலும், சுமார் 40,000 ரூபாய் அதிக விலை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Volkswagen India has teased images of all-new Polo ALLSTAR model, which will soon be launched in India. These images are shared in official Indian website. Polo ALLSTAR is available for test drives pan India through authorised VW dealerships. The colours on offer by Volkswagen for Polo ALLSTAR model in India- Blue Silk, Reflex Silver, Flash Red, Candy White and Toffy Brown...
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK