கோலாகலமாக நடந்த அல்வாஸ் மோட்டோரிக் வாகன கண்காட்சி!

Written By:

கர்நாடக மாநிலம், மங்களூர் அருகே உள்ள அல்வாஸ் பொறியியல் கல்லூரியில் 2017 மோட்டோரிக் வாகன கண்காட்சி நேற்று வெகு சிறப்பாக நடந்தது. இந்த கண்காட்சியை அதானி உடுப்பி மின் நிறுவனத்தின் உயர் அதிகாரி கிஷோர் அல்வா துவங்கி வைத்தார்.

மோட்டோரிக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட உயர்வகை கார்களும், சூப்பர் பைக்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், தேசிய அளவில் புகழ்பெற்ற பல சாகச கலைஞர்களும் தங்கள் பங்குக்கு அசத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

நான்காம் ஆண்டாக நடந்த இந்த மோட்டோரிக் கண்காட்சியை அல்வாஸ் கல்வி அறக்கட்டளை, டிஏஎஸ்சி, ஐஎம்எஸ்சி, பெத்ரா அட்வென்ச்சரஸ் க்ளக், கோஸ்ட்டல் ரைடர்ஸ், கேஎல்14 மற்றும் டீம் பெத்ரா யுனைடேட் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த கண்காட்சியில் பிஎம்டபிள்யூ இசட்4, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார், மெர்சிடிஸ் ஜிஎல் 350 எஸ்யூவி, ஆடி ஆர்8, ஆடி ஏ6 உள்ளிட்ட பல உயர்வகை கார் மாடல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. 1991ம் ஆண்டு லிங்கன் டவுன் கார் என்ற ஃபோர்டு நிறுவனத்தின் கிளாசிக் கார் எல்லோரையும் கவர்ந்தது.

அதேபோன்று, ஹார்லி ஃபேட்பாய் டெர்மினேட்டர் 2, ஹார்லி ஃபேட்பாய் பாபர், எம்வி அகஸ்ட்டா புருட்டேல் 800, கவாஸாகி இசட்எக்ஸ் 10ஆர், கவாஸாகி இசட்எக்ஸ்14ஆர், யமஹா மிட்நைட் ஸ்டார், சுஸுகி ஹயபுசா, டிரையஃப்ம் டைகர், யமஹா ஆர்1 உள்ளிட்ட பல உயர்வகை பைக் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

இந்த கண்காட்சியில் கார் மற்றும் பைக் சாகசங்கள் முத்தாய்ப்பாக அமைந்தன. இந்திய ராலி சாம்பியன்களான மங்களூர் நகரை சேர்ந்த அர்ஜுன் ராவ், ராகுல் காந்த்ராஜ் சாகச வித்தைகளை காட்டி மிரள வைத்தனர். அத்னன் மற்றும் சுதீப் கோத்தாரா ஆகியோர் சூப்பர்க்ராஸ் சீக்குவன்ஸ் சாகசங்களை செய்து காட்டினர்.

உடுப்பியை சேர்ந்த ஹாட் பிஸ்டன்ஸ் குழுவினரின் பைக் சாகசங்களும் பார்ப்போரை வியக்க வைத்தன. இவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ஜெய்ப்பூரை சேர்ந்த கவுரவ் கத்ரி நிகழ்த்திய சாகசம் எல்லோரையும் மயிர் கூச்செரிய வைத்தது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையின் உதவியுடன் ஆகாயத்தில் பைக்கில் பறந்து அனைவரையும் வியக்க வைத்தார். இடையில் அல்வாஸ் கல்லூரியின் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. சுமார் 75 அடி இடைவெளியை அவர் மேடையின் உதவியுடன் தாண்டி சிலிர்க்க வைத்தார். அத்துடன், இதுபோன்ற சாகசங்களை பயிற்சி இல்லாமல் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அல்வாஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகி விவேக் அல்வா, விஷ்வாஸ் பாவா பில்டர்ஸ் உரிமையாளர் அப்துல் புதிகே, பெத்ரா பெத்ரா அட்வென்ச்சரஸ் க்ளப் தலைவர் அக்ஷய் ஜெயின், மோட்டார் பந்தய வீரர் அஷ்வின் நாயக் பங்கேற்றனர்.

மேலும், மாண்டோவி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ராவ், தொழிலதிபர் நாராயண், விஞ்ஞானி ஹரிஷ் பட், அல்வாஸ் மோட்டோரிக் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ண ஷெட்டி, அல்வாஸ் பொறியியல் கல்வி நிலையத்தின் முதல்வர் பீட்டர் ஃபெர்னான்டஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

Story first published: Monday, May 22, 2017, 15:14 [IST]
English summary
‘Alva’s Motorig 4 Event highlights.
Please Wait while comments are loading...

Latest Photos