விரைவில் வெளியாகும் 2017 பி.எம்.டபுள்யூ 2 சிரீஸ் மாடல்கள்

Written By:

பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் இரட்டை தயாரிப்பான 2 சிரீஸ் கேப்ரியோலெட் மற்றும் 2 சிரீஸ் கூப் கார்களை இம்மாதம் இறுதியில் அந்நிறுவனம் வெளியிடுகிறது.

பொதுவாக பி.எம்.டபுள்யூ மேம்படுத்தப்பட்ட மாடல்களில் அனைத்து கட்டமைப்புகளையும் சிறிய மாற்றத்தையாவது செய்திருக்கும்.

ஆனால் 2 சிரீஸ் கேப்ரியோலெட் மற்றும் கூப் கார்களில் சிறிய ரக மாற்றங்களை மட்டுமே பி.எம்.டபுள்யூ செய்திருக்கிறது.

இந்த கார்களின் வெளிப்புறத் தோற்றத்தில் பம்பர் பகுதியில் இருக்கும் காற்று குழாய்களின் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அளவிலான எல்.இ.டி விளக்குகளை ஒருங்கே பெற்ற முகப்பு பகுதி மற்றும் லென்ஸ் கிராபிக் கொண்ட பின் பகுதி விளக்குகள் 2 சிரீஸ் கார்களில் கவனமீர்க்கின்றன.

இந்த கார் மாடல்களின் முன்னர் இருந்த அலாய் வீல்களின் 16 அகல அளவை விட கூடுதலாக 18 அகல அளவில் புதிய வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2-சிரீஸ் கூப் மற்றும் 2- சிரீஸ் கேப்ரியோல்ட் கார்களின் உட்புற கட்டமைப்பில் டாஷ்போர்டு பகுதி சில மாற்றங்கள் பெற்றுள்ளது.

காற்று வெளியேறும் பகுதி, செண்டர் கன்சோல் மற்றும் பேனல் பகுதி ஆகியவற்றின் அளவீடுகளில் பி.எம்.டபுள்யூ சிறிய மாற்றத்தை செய்துள்ளது.

கூடுதலாக, இதில் 8.8 அகலத்தில் உள்ள டிஸ்பிளேவில் ஐ-டிரைவ் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பத்திலும் இதில் கூடுதலான அம்சங்களையும் பி.எம்.டபுள்யூவின் இந்த 2 சிரீஸ் மாடல்கள் பெற்றுள்ளன.

சாலைகளுக்கு ஏற்றவாறு ஓட்டத்தை கட்டமைக்கும் க்ரூஸ் கண்ட்ரோல், ஓரங்களில் பயணக்கும் போது எச்சரிக்கும் வசதி இதில் குறிப்பிடும்படியான அம்சங்கள்.

மேலும், அவசர காலத்தில் தேவைக்கு ஏற்றவாறு இயங்கும் பிரேக் அமைப்பு உள்ளது. இதில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போது தேவைக்கு ஏற்றவாறு இயக்கம்பெறும்.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எரிவாயுகளில் இயங்கும் மாடல்களில் பி.எம்.டபுள்யூ 2 சிரீஸ் கார்கள் வெள்வருகின்றன.

பெட்ரோல் எஞ்சின் மூலம் 134 பி.எச்.பி பவர் கிடைக்கும். அதேபோல டீசல் எஞ்சின் மூலம் 148 பி.எச்.பி பவர் கிடைக்கும்.

6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு மாடல்களில் இந்த கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்த மாடலான இந்த 2 சிரீஸ் மாடல்களின் விலை தற்போது பயன்பாட்டில் இருக்கும் மாடல்களில் விலையோடு சிறிய அளவில் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பி.எம்.டபுள்யூ 218ஐ எஸ்.இ மாடலின் புதிய மாடல் ரூ.19.65 லட்சம் விலையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, எம் 240ஐ மாடலின் விலை ரூ. 29.96 லட்சத்திற்குள் வரலாம் என ஆட்டோமொபைல் சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிம்.டபுள்.யூ நிறுவனம் இந்த கார்களுக்கு மேடிட்டேரினியன் ப்ளூ, சீசைட் ப்ளூ மற்றும் சன்செட் ஆரஞ்சு என நிறங்களிலும் புதுமை அளித்துள்ளது.

English summary
The revised BMW 2 Series received LED headlights and tail lights which now come standard; interior changes are also present and four-wheel drive to supplement more powerful engines.
Please Wait while comments are loading...

Latest Photos