இந்தியாவில் X3 3.0 லிட்டர் டீசல் காரின் உற்பத்தியை நிறுத்துவதாக பிஎம்டபுள்யூ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Written By:

இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த 3.0 லிட்டர் இன்-லைன் சிகிஸ் சிலிண்டர் டீசல் மாடல் எஸ்.யூ.வி காரின் உற்பத்தியை நிறுத்துவதாக பி.எம்.டபிள்யூ தெரிவித்துள்ளது.

பி.எம்.டபுள்யூவின் டீசல் எஞ்சின் கொண்ட தயாரிப்புகளில் மிக பிரபலமான இந்த மாடல் கார் இந்தியாவில் பல வாடிக்கையாளர்களின் தேர்வாக தற்போதும் இருந்து வருகிறது.

ஆனால் இதே மாடலில் 2.0 லிட்டர், ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்டு வரும் வெளிவரும் எக்ஸ் 3 எஸ்.யூ.வி காரின் விற்பனை இந்தியாவில் தொடரும் என பி.எம்.டபுள்யூ தெரிவித்துள்ளது.

பலரது விருப்பத்தேர்வாக இருந்த 3.0 லிட்டர் பி.எம்.டபுள்யூ எக்ஸ் 3 எஸ்.யூ.வி காரில் ட்வின் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது

இது 255 பி.எச்.பி பவர் மற்றும் 580 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் துடுப்பு அமைப்புகள் கொண்ட 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இதில் உள்ளது.

இதே சிரீஸில் 2.0 லிட்டர் ஃபோர் சிலிண்டர் டீசல் எஞ்சின் கொண்ட எக்ஸ் 3 எஸ்.யூ.வி கார் 188 பி.எச்.பி பவர் மற்றும் 400 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மேலும் இந்த சிரீஸில் 2.0 லிட்டர் ஃபோர் சிலிண்டர் கொண்டு பெட்ரோலில் இயங்கும் மாடலும் உள்ளது இது 241 பி.எச்.பி பவர் மற்றும் 350 என்.எம் டார்க் திறனை வழங்க வல்லது.

2.0 ஃபோர் சிலிண்டர் எக்ஸ் 3 காரில் உள்ள டீசல் மற்றும் பெட்ரோல் மாடல்கலில் 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

3.0 6 சிலிண்டர் டீசல் எக்ஸ் 3 மாடல் காரின் உற்பத்தியை இந்தியாவில் நிறுத்துவதாக பி.எம்.டபுள்யூ ஏன் அறிவித்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை.

ஆனால் தயாரிப்பில் இருந்தவரை இந்த மாடல் பல பி.எம்.டபுள்யூ வாடிக்கையாளர்களின் அபிமானத்தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
BMW India will offer only the 2.0-litre in the diesel model in its X3 SUV range.
Please Wait while comments are loading...

Latest Photos