ஃபோர்டு இந்தியா வழங்கும் அதிரடி சலுகை: எந்த எந்த... கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி..? முழு தகவல்கள்..!

Written By:

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் அடையாளமாக சாலைகளில் சுற்றி வரும் எஸ்.யூ.வி ஈகோஸ்போர்டு, ஃபிகோ மற்றும் ஏஸ்பையர் ஆகிய கார்களுக்கு அதிரடி சலுகைகளை ஃபோர்டு இந்தியா அறிவித்துள்ளது.

ஜூலை 1ம் தேதி முதல் பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி) இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதனால் பல பொருட்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை விற்கும் முனைப்பில் இறங்கியுள்ளன.

பொருட்கள் மற்றும் சேவை வரியால் ஆட்டோமொபைல் துறையில் வரி விதிப்பு பெருமளவில் குறையும் நிலை உருவாகியுள்ளது.

அதன்காரணமாக, மெர்சிடிஸ் உள்ளிட்ட சொகுசுக் கார்கள் முதல் பல பயணிகள் கார், எஸ்.யூ.வி கார் ஆகியவற்றில் விலை குறையும் .

ஜி.எஸ்.டியை இந்தியாவில் நடைமுறைப்படுத்தும் முன்னரே மெர்சிடிஸ் இந்தியாவில் தயாராகும் தனது கார்களுக்கு சலுகைகளை அறிவித்தது.

தற்போது இதை பின்பற்றி ஃபோர்டு இந்தியா நிறுவனம், ஜி.எஸ்.டி-யை கருத்தில் கொண்டு தனது கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஃபோர்டு அறிவித்துள்ள இந்த சலுகை உடனடியாக அமலுக்கு வரவுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்.யூ.வி ஈகோஸ்போர்ட், ஃபிகோ, ஏஸ்பையர் கார்களின் விலை அதிரடி மாற்றம் கண்டுள்ளன.

ஃபோர்டின் ஹிட் மாடல் காரான ஈகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்.யூ.வி கார் மாடல்களுக்கு ஏற்றவாறு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை குறைக்கப்பட்டுள்ளன.

டெல்லிஎக்ஸ்-ஷோரூம்களில் ஈகோஸ்போர்ட் எஸ்.யூ.வி காரின் விலை ரூ.7.18 லட்சம் முதல் ரூ.1.076 லட்சம் வரை இந்தியாவில் விற்கப்படுகிறது.

தற்போது ஃபிகோ மற்றும் ஏஸ்பையர் கார்கள் டெல்லி எக்ஸ்-ஷோரூம்களின் விலைப்படி ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் செடான் ஏஸ்பையர் கார்கள் மாடல்களுக்கு தகுந்தபடி ரூ.5.44 லட்சம் மற்றும் ரூ.8.28 லட்சம் விலைகளில் விற்பனை ஆகின்றன.

ஷோரூம்களில் மாடல்களுக்கு ஏற்றவாறு ரூ. 4.75 லட்சம் மற்றும் ரூ.7.73 லட்சம் விலையில் ஃபோர்டு ஃபிகோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து ஃபோர்டின் இந்திய விற்பனை பிரிவு தலைவரான வினய் ரெய்னா கூறும்போது "ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு முன் வாடிக்கையாளர்களின் தேவையை கருதி ஃபோர்டு இந்த சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் எங்களுக்கு மகிழ்ச்சியே" என்றார்.

தற்போதைய வரி விதிப்பில் இருந்து எஸ்.யூ.வி போன்ற பெரிய அளவிலான கார்களுக்கு ஜி.எஸ்.டியால் விலை குறைகிறது.

இதன்மூலம் தற்போது 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வரும் அதிக ஆற்றல் கொண்ட எஞ்சின் கொண்ட கார்களுக்கு, ஜி.எஸ்.டி-யால் இனி 15 சதவீதம் வரை மட்டுமே வரி விதிக்கப்படும்.

1200சிசி-க்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட பெட்ரோலில் இயங்கும் கார்கள் ஒரு சதவீத வரியை பெறும்.

1500சிசி-க்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட டீசலில் இயங்கும் கார்கள், 3 சதவீத வரியை பெறும்.

1500சிசி எஞ்சின் திறன் பெற்ற, 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட எஸ்.யூ.வி கார்கள் 15 சதவீத வரி விதிப்பை பெறும்.

ஜி.எஸ்.டி-யால் வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடாது என முன்னெச்சரிக்கையால், மெர்சிடிஸ், ஆடி மற்றும் பி.எம்.டபுள்யூ போன்ற சொகுசுக் கார் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது தயாரிப்புகளுக்கான விலை மாற்றத்தை குறித்து அறிவித்துவிட்டது.

இந்த பட்டியலில் மெர்சிடிஸ் நிறுவனம் 12 சதவீத வரை விலை குறைப்பை இந்தியாவில் தயாராகும் கார்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பால் இந்தியாவில் தயாராகும் மெர்சிடிஸ் கார்கள் ரூ.7 லட்சம் வரை ஜி.எஸ்.டி-யால் விலை குறைப்பை பெறுகின்றன.

மெர்சிடிஸிற்கு இணையாக ஆடி நிறுவனமும் ஜி.எஸ்.டி தாக்கத்தால் மாடல்களுக்கு ஏற்றவாறு ரூ.10. லட்சம் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford India Announces Offering Discounts On EcoSport, Figo And Aspire. Click For Details...
Please Wait while comments are loading...

Latest Photos