ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி காருக்கு அபார வரவேற்பு; தொடர்ந்து குவியும் ஆர்டர்கள்...!

Written By:

டபுள்யூ.ஆர்-வி காரை அறிமுகப்படுத்திய பின்னர் இந்தியாவில் தனது விற்பனை திறனை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது ஹோண்டா நிறுவனம்.

மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காருக்கான முன்பதிவு ரேஸ் கார் வேகத்தில் சென்று கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஹோண்டா டபிள்பூ.ஆர்-வி கார் இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்தை தாண்டி முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் மாதம் அறிமுகமான போது 3000 எண்ணிக்கையிலான ஹோண்டா டபிள்யூ.ஆர்-வி கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

ஹோண்டாவின் தயாரிப்புகளிலேயே செடான் மாடல் காரான சிட்டி-க்கு பிறகு 2வது முறையாக அதிக விற்பனையை பெற்ற கார் என்ற பெயரை பெற்றுள்ளது ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி.

மாருதி நிறுவனத்தின் விட்டாரா பிரஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் கார்களுக்கு போட்டியாகத்தான் இந்திய சந்தையில் டபுள்யூ.ஆர்-வி காரை களமிறக்கியது ஹோண்டா.

ஆனால் எதிர்பாராத விதமாக சந்தையில் சர்ரென்ற வேகம் காட்டி பதபதக்கவைத்து வரும் இந்த டபுள்யூ.ஆர்-வி காரின் விற்பனை ஹோண்டாவிற்கு எண்ணிலடங்கா ஆனந்தத்தை தந்துள்ளது.

எஸ்.யூ.வி மாடல் கார் போன்ற தோற்றத்தை தந்தாலும், ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி கார் எஸ்.யூ.வி இல்லை.

ஆனால் பிரஸ்ஸா மற்றும் ஈகோ ஸ்போர்ட் காரை விற்பனையில் டபுள்யூ.ஆர்-வி கார் முந்திசெல்ல காரணம் ஒரு தனித்துவம் தான்.

 

சகலவசதிகளுடன் கூடிய கட்டமைப்பு, பயணிகள் உட்கார, ஓட்டுநருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான இட வசதி போன்ற அம்சங்கள் ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி கார் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

தொழில்நுட்பத்திற்கான வடிவமைப்புகளில். 7 அங்குல அளவுகொண்ட தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது. 

இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டத்திற்கு ஏற்றவாறான வை-ஃபை வசதி, காரின் வேகத்தை தேர்வு செய்யக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி காரில் உள்ளது வாடிக்கையாளர்கள் இந்த காரை அதிகமாக தேர்வு செய்ய காரணமாக அமைந்துவிட்டது.

மேலும் எஞ்சினை இயக்க மற்றும் அணைப்பதற்கான பொத்தான், மின்சார பயன்பாட்டில் இயங்கும் சன்ரூஃப் போன்றவை இந்த காரில் வரவேற்க படக்கூடிய அம்சங்களாக உள்ளன.

பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்புகளிலும் ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி கவனமீர்க்கிறது. தானாக இயங்கும் பிரேக் அமைப்பு (ABS) அனைத்து சக்கரங்களையும் சாலை கட்டமைப்பு ஏற்றவாறு இயங்கச்செய்யும் மின்னணு பிரேக்குடன் (EBD) இணைக்கப்பட்டுள்ளது.

ஆபத்துக்காலத்தில் இயங்கக்கூடிய வகையில் டூயல் ஏர்பேகுகள் இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இருக்கைகளில் ஏர்பேகுகள் அனைத்தும் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டாவின் டபுள்யூ.ஆர்-வி கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் உருவாக்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் விடெக் 1.2 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்படுகிறது.

இதுவே டீசலால் இயங்கும் காரில் ஐ-டிடெக் 1.5 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின் ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி காரில் பொருத்தப்படுகிறது.

பெட்ரோல் மூலம் இயங்கும் காரினால் நமக்கு 89 பி.எச்.பி பவர் மற்றும் 100 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இதுவே டீசலினால் இயங்கும் காரில் 99 பி.எச்.பி மற்றும் 22 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

டீசல் எஞ்சினை பொறுத்தவரை ஒரு லிட்டருக்கு 25.5 மைலேஜ் கிடைக்கிறது. இதுவே பெட்ரோலிற்கான செயல்பாடுகள் மூலம் ஒரு லிட்டருக்கு 17.5 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கிறது.

தற்போதைய அறிவிப்புப்படி, ஹோண்டா டபுள்யூ-ஆர்-வி கார் இந்தியாவில் மாடல்களுக்கு ஏற்றவாறு ரூ.7.75 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Since Honda launched the WR-V in March 2017, the crossover has received over 12,000 bookings.
Please Wait while comments are loading...

Latest Photos