மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தயம் நாளை துவங்குகிறது!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் மோட்டார் பந்தயம் நாளை டெல்லியில் துவங்க உள்ளது. இந்த ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் பார்க்கலாம்.

Written By:

'மினி டக்கார் ராலி' என்று பெருமையுடன் அழைக்கப்படும் மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி மோட்டார் பந்தயம் நாளை டெல்லியில் துவங்குகிறது. கடும் சவால்கள் நிறைந்த இந்த பந்தயத்தில் நாட்டின் பிரபல மோட்டார் பந்தய வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த பந்தயமானது எக்ஸ்ட்ரீம், என்ட்யூர், எக்ஸ்ப்ளோர் மற்றும் மோட்டோ என 4 பிரிவுகளில் நடக்கிறது. இந்த பந்தயத்தில் பங்கேற்பதற்காக 200க்கும் மேற்பட்ட மோட்டார் பந்தய வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் கடும் சவால்கள் நிறைந்த பாலைவனப் பகுதியில் இந்த மோட்டார் பந்தயம் நடத்தப்பட உள்ளதால், தங்களது திறமையை வெளிப்படுத்த மோட்டார் பந்தய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

நாளை புது டெல்லியில் துவங்கும் இந்த பந்தயமானது ஹனுமன்கர், பிகனேர் மற்றும் ஜெய்சால்மர் வழியாக பிப்ரவரி 4ந் தேதி ஜோத்பூரில் முடிவடைகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்படும் விசேஷமான இரவு பந்தயமும் ஜெய்சால்மரில் நடக்கிறது. கடும் குளிர் மற்றும் இருளில் 150 கிலோமீட்டர் அளவுக்கு பந்தய தூரத்தை வீரர்கள் கடக்க வேண்டும்.

இந்த ராலி பந்தயத்தில் டக்கார் ராலியில் மூன்று முறை பங்கேற்ற அனுபவம் வாய்ந்த சி.எஸ்.சந்தோஷ் உள்ளிட்ட பல பிரபல மோட்டார் பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ராலி பந்தயத்தை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பந்தய வழிகளில் குழும இருக்கின்றனர்.

மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தின் நிகழ்வுகளை எமது டிரைவ்ஸ்பார்க் போட்டோகிராஃபர் அபிஜித் பதிவு செய்ய இருக்கிறார். அந்த பிரத்யேக படங்களை விரைவில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Rally dubbed as the "Mini Dakar Rally" will be categorized into four.
Please Wait while comments are loading...

Latest Photos