புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

சொகுசு கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் விற்பனையில் இருக்கிறது. இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் ஐந்தாம் தலைமுறை மாடல். மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் அதிக நீளம் கொண்ட லாங் பேஸ் மாடல்தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். மேலும், இந்த காரின் எஞ்சின் இயக்கத்தை கம்போர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ் என மூன்று விதமான இயக்க நிலைகளில் மாற்றிக் கொள்ளக்கூடிய வசதியும் உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் ஏர் சஸ்பென்ஷனுடன் வந்துள்ளது. இந்த சஸ்பென்ஷன் அமைப்பு சொகுசான பயணத்தை வழங்குவதோடு, வேகத்துக்கு தக்கவாறு காரின் தரை இடைவெளி உயரத்தை தானியங்கி முறையில் கூட்டி, குறைத்து அதிக நிலைத்தன்மையை கொடுக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பெட்ரோல் எஞ்சின் 0-100 கிமீ வேகத்தை 8.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டீசல் மாடலில் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 254 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 0-100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தாக உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் டிசைனை பொறுத்தவரையில், புதிய எஸ் க்ளாஸ் மற்றும் சி க்ளாஸ் கார்களை ஒத்திருக்கிறது. முன்பைவிட கூர்மையான வடிவமைப்பு தாத்பரியங்களுடன் மேம்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட் சிஸ்டம் உள்ளது. வழக்கம்போல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றிருக்கும் க்ரில் அமைப்பும் பென்ஸ் ரசிகர்களை வெகுவாக கவரும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் 12.3 டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 13 ஸ்பீக்கர்களுடன் கூடிய 590 வாட் பர்ம்ஸ்டெர் சவுண்ட் சிஸ்டம் இதற்கு சிறப்பு சேர்க்கிறது. ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலிலேயே சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கு டச்பேடு பட்டன் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இதர முக்கிய அம்சங்கள்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பின்புறத்தில் மிக மிக வசதியான இருக்கை அமைப்பு உள்ளது. இந்த காரின் பின் இருக்கைகளை சாய்த்துக் கொள்ளும் வசதியும், மசாஜ் வசதியும் இருக்கிறது. இதனால், மிக சொகுசான இதமான பயண அனுபவத்தை வழங்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்ட், அடாப்டிவ் பிரேக் விளக்குகள், 360 டிகிரி கேமரா சிஸ்டம் போன்றவை முக்கிய சிறப்பம்சங்களாக கூற முடியும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் [லாங் வீல் பேஸ் மாடல்] ரூ.56.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles
English summary
2017 Mercedes E-Class Launched In India. The all-new E-Class is available only in the long-wheelbase form in the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X