அட்டகாசமான தோற்றத்தில் புதிய மிட்சுபிஷி பஜிரோ ஸ்போர்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு தகவல்கள்..!!

Written By:

பிரபல ஜப்பான் நிறுவனமான மிட்சுபிஷியின் பஜிரோ மாடல் 1973ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் உள்ள உலகின் மிகவும் பிரபல கார் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.

மிட் சைஸ் எஸ்யூவி காரான பஜிரோ இந்த செக்மெண்டில் பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் கோலோய்ச்சி வருகிறது. 

பஜிரோவின் போட்டி மாடல்களான டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் மாடல்கள் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட நிலையில் பஜிரோ மாடலை மட்டும் இந்தியாவில் மிட்சுபிஷி நிறுவனம் மேம்படுத்தாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் போட்டியாளர்களை சமாளிக்க பஜிரோ ஸ்போர்ட் காரின் புதிய வேரியண்டை இந்திய சந்தையில் அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது 4*4 மற்றும் 4*2 என இரண்டு டிரைவிங் மோட்களில் கிடைக்கிறது.

பஜிரோ ஸ்போர்ட் காரின் இந்த புதிய வேரியண்ட் ‘செலக்ட் பிளஸ்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதில் தோற்ற அளவிலான மாற்றங்களும், கூடுதல் வசதிகளும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

புதிய பஜிரோ ஸ்போர்ட் செலக்ட் பிளஸ் கார் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் உள்ளது. இந்தக் காரின் ரூஃப், அலாய் வீல்கள் (17 இஞ்ச்), வீல் ஆர்ச்சுகள், முகப்பு கிரில் மற்றும் பம்பர், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் உள்ளது, இது கவர்ச்சியை மேம்படுத்துவதாக உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

இதே போல டோர் ஹேண்டில்கள் மற்று வெளிப்புற ரியர் வியூ கண்ணாடி (ஓவிஆர்எம்) உள்ளிட்டவை கிரோம் ஃபினிஷிங்கில் உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

பஜிரோ ஸ்போர்ட் செலக்ட் பிளஸ் வேரியண்டில் குரூஸ் கண்ட்ரோல், பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இளம் நீலம் கலந்த வெள்ளை நிறத்தில் எரியும் ஹச்ஐடி எனப்படும் ஹை-இண்டென்ஸிட்டி ஃசெனான் முகப்பு விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரின் வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் (ஓவிஆர்எம்) எலக்ட்ரானிக் முறையில் மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி கொண்டது. இதில் சில்லர் பாக்ஸ் எனப்படும் மினி ஃபிரிட்ச், பின்சீட்டில் இருப்பவர்களுக்காக முன்புற சீட்களுக்கு பின் டிவிடி பிளேயர் ஆகிய அம்சங்கள் உள்ளது.

இஞ்சின்

புதிய பஜிரோ ஸ்போர்ட் செலக்ட் பிளஸ் காரில் 2.5 லிட்டர் டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 178 பிஹச்பி ஆற்றலையும், 4*4 டிரைவ் மோடில் 400 என்எம் டார்க்கையும், 2*2 டிரைவ் மோடில் 350 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாகும்.

டிரான்ஸ்மிஷன்

பஜிரோ ஸ்போர்ட் செலக்ட் பிளஸ் காரின் இரண்டு வீல் டிரைவ் வெர்சனில் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸும், இதன் 4*4 வெர்சனில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸும் உள்ளது.

இந்த செக்மெண்டில் உள்ள கார்களிலேயே பஜிரோ ஸ்போர்ட் ஒரு சிறந்த ஆஃப் ரோடர் காராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

வண்ணங்கள்

புதிய பஜிரோ ஸ்போர்ட் வேரியண்ட் 4 டூயல் டோன் கலர் கலவைகளில் கிடைக்கிறது. அவை..

  • கருப்பு & சிவப்பு
  • கருப்பு & மஞ்சள்
  • கருப்பு & சில்வர்
  • கருப்பு & வெள்ளை

விலை விபரம்

புதிய மிட்சுபிஷி பஜிரோ ஸ்போர்ட் செலக்ட் பிளஸ் காரின் வேரியண்ட் வாரியான விலை விபரம்..

 

  • 4*4 மேனுவல் வெர்சன் - ரூ.30.95 லட்சம்
  • 4*2 ஆட்டோமேடிக் வெர்சன் - ரூ. 30.53 லட்சம்

 

(இரண்டு விலையும் டெல்லி எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் தரப்பட்டுள்ளது)

 

புதிதாக அறிமுகமாகியுள்ள மிட்சுபிஷி பஜிரோ ஸ்போர்ட் செலக்ட் பிளஸ் கார் மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் மாடல்களுக்கு கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, May 30, 2017, 17:33 [IST]
English summary
Read in Tamil about Mitsubishi pajero sport mini suv car's new variant select plus launched in india. price, details and more
Please Wait while comments are loading...

Latest Photos