இந்த ஏப்ரலில் இந்த ஐந்து கார்களுக்கு தான் எல்லாரும் மரண வெயிட்டிங்! முக்கியமா முதல் டொயோட்டா எலெக்ட்ரிக் கார்!

2026ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியதுபோல் இருந்தது; ஆனால் அதற்குள் ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு 2026 ஏப்ரல் ஒரு பரபரப்பான மாதமாக அமையவுள்ளது. பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய கார்கள் மற்றும் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தவும், அவற்றின் விலைகளை வெளியிடவும் தயாராகி வருகின்றன. இந்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐந்து கார்களில், டொயோட்டா எபெல்லா, எம்ஜி மெஜஸ்டர் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் ஆகிய மூன்று கார் மாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன.

இந்த ஏப்ரலில் இந்த மூன்று கார்களின் விலைகளையும் அவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். நிசான் நிறுவனத்தின் ஒரு புதிய எஸ்யூவி (டெக்டான்) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பாக்ட் எஸ்யூவி காரின் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவையும் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவ்வாறு, இந்த மாதத்தில் அறிமுகமாக இருக்கும் புதிய கார்கள் மற்றும் எஸ்யூவிகள் குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

2026 april new car launches

ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Volkswagen Taigun Facelift)

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட டைகுன் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் காரை ஏப்ரல் 9 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது. 2021இல் இந்தியாவில் வெளியானதில் இருந்து, இந்த காம்பாக்ட் எஸ்யூவிக்கு இதுதான் முதல் பெரிய அப்டேட் ஆகும். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சகோதர நிறுவனமான ஸ்கோடா ஆட்டோவின் குஷாக் சமீபத்தில் பெற்ற மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் மாற்றங்களைப் போலவே, டைகுன் ஃபேஸ்லிஃப்ட்டிலும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புற வடிவமைப்பில் சிறிய மாற்றங்களும், மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்ப அம்சப் பட்டியலும் இடம்பெறலாம். இதன்படி, மசாஜ் வசதியை கொண்ட பின் இருக்கைகள் சேர்க்கப்படலாம். என்ஜினை பொறுத்தவரையில், தற்போதுள்ள 1.0-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் தொடரப்படலாம். 1.0-லிட்டர் என்ஜின், குஷாக் ஃபேஸ்லிஃப்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 april new car launches

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா (Toyota Urban Cruiser Ebella)

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, அர்பன் க்ரூஸர் எபெல்லா என்கிற இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் காரின் விலையை இந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கவுள்ளது. சில வாரங்களுக்கு முன்பே டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இது, இந்தியாவில் டொயோட்டாவின் மாஸ்-மார்க்கெட் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பிரிவில் நுழைகிறது.

எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor)

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மெஜஸ்டர் எஸ்யூவி காரின் விலையை 2026 ஏப்ரலில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டெலிவரிகள் மே மாதம் தொடங்கும். புதிய எம்ஜி மெஜஸ்டர் நிறுவனத்தின் விலையுயர்ந்த டி-செக்மென்ட் எஸ்யூவி காராக இந்திய சந்தையில் எம்ஜி குளோஸ்டருக்கு மேலே இது நிலைநிறுத்தப்பட உள்ளது. எம்ஜி மெஜஸ்டர், ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0-லிட்டர் டீசல் என்ஜின் மூலம் இயங்குகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் (Mercedes-Benz CLA Electric)

ஜெர்மன் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், புதிய தலைமுறை சிஎல்ஏ காரை 2026 ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கைவிட்டு முழுமையான எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் உடன் புதிய சிஎல்ஏ வருகிறது. இதன் டாப்-ஸ்பெக் சிஎல்ஏ 250+ லாங் ரேஞ்ச் வேரியண்ட், ஒருமுறை சார்ஜ் செய்தால் 792 கி.மீ (WLTP) தூரம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிசான் டெக்டான் (Nissan Tekton)

நிசான் நிறுவனம், இந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தைக்கான தனது முற்றிலும் புதிய சி-எஸ்யூவி ரக கார் மாடலான டெக்டானை வெளியிடவுள்ளது. இந்த நிசான் டெக்டான், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், பிளாட்ஃபார்ம் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை சமீபத்தில் வெளியான புதிய டஸ்டர் எஸ்யூவியுடன் பகிர்ந்து கொள்ளும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே ஒவ்வொரு மாதமும் பல்வேறு புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்திலும் இந்திய கார்கள் மார்க்கெட் வேற லெவலுக்கு மாற உள்ளது. இந்த தொகுப்பில் நாம் பார்த்தவற்றில், இந்தியாவில் முதல் டொயோட்டா எலெக்ட்ரிக் காரான அர்பன் க்ரூஸர் எபெல்லாவின் அறிமுகம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. மேலும், இந்த தொகுப்பில் நாம் பார்க்காத ஏதேனும் கார் திடீரென அறிமுகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 1, 2026, 7:36 [IST]
English summary
2026 april new car launches and unveils volkswagen taigun facelift to nissan tekton
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+