காரில் ஏசி உடன் சேர்த்து இதுவும் இருந்தால் வெயில் காலத்தை ஈசியா சமாளிக்கலாம்! டாடா, ஹூண்டாய் கார்களில் மட்டுமே

கோடைக்காலம் துவங்கிவிட்டதால் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரில் ஏசி (AC) வசதி இருக்கும் என்றாலும், கூடுதலாக வெண்டிலேட்டட் (Ventilated) இருக்கைகள் எனப்படும் காற்றோட்டமான இருக்கைகளும் முன் இருக்கை வரிசையில் இருந்தால் கூடுதல் சவுகரியமாக இருக்கும். இதனாலேயே வெண்டிலேட்டட் இருக்கைகள் இன்றைய காலத்தில் பெரும்பாலான கார்களில் வழங்கப்படுகின்றன என்றாலும், விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் என்று பார்த்தால் இந்தியாவில் இரு கார் மாடல்களில் மட்டுமே வெண்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer): அல்ட்ராஸ் ரேசர் ஆனது டாடா அல்ட்ராஸ் காரின் செயல்திறன்மிக்க வெர்சன் ஆகும். இதனாலேயே வழக்கமான அல்ட்ராஸ் காரை காட்டிலும் சற்று அதிகமான விலையில் அல்ட்ராஸ் ரேசர் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் தற்சமயம் குறைந்த விலையில் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் உடன் ஹேட்ச்பேக் காராக அல்ட்ராஸ் ரேசரை வாங்கிவிடலாம்.

cheapest hatchback cars with ventilated seats

இருப்பினும், இந்த காரிலும் எல்லா வேரியண்ட்களிலும் இந்த இருக்கைகளை பெற முடியாது. விலைமிக்க டாப் வேரியண்ட்டான ஆர்3 (R3) வேரியண்டில் மட்டுமே இதனை பெற முடியும். இந்த காரில் வெண்டிலேட்டட் இருக்கைகள் 3 விதங்களில் குளிர்ச்சியான காற்றை வழங்கக் கூடியவைகளாக உள்ளன. இதற்காக, முன் இருக்கைகள் இரண்டிலும் கதவுகளுக்கு அருகில் பொத்தான்கள் வழங்கப்படுகின்றன.

அல்ட்ராஸ் ஆர்3 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) தற்சமயம் ரூ.10.99 லட்சமாக உள்ளது. அல்ட்ராஸ் காரின் இந்த டாப் வேரியண்ட்டில் பவர்ஃபுல்லான டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 120 எச்பி இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

cheapest hatchback cars with ventilated seats

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): விற்பனையில் அல்ட்ராஸ் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் கார், ஐ20 ஆகும். அல்ட்ராஸ் ரேசர் காரை போலவே ஐ20 காரிலும் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில், ஐ20 காரின் டாப் வேரியண்ட்களான அஸ்டா (ஆப்ஷன்ல்) (Asto (O)) மற்றும் அஸ்டா (ஆப்ஷன்ல்) க்னைட் எடிஷனில் இந்த இருக்கைகள் கிடைக்கின்றன.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.50 லட்சத்தில் இருந்து ரூ.11.53 லட்சம் வரையில் உள்ளன. இந்த வேரியண்ட்களில் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் உடன் பிரீமியம் தரத்திலான 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுவதால், முன் இருக்கைகளில் மிகவும் சவுகரியமாக அமர்ந்து கொண்டு இனிமையாக பாடல்களை கேட்டப்படி பயணம் செய்ய முடிகிறது.

ஹூண்டாய் ஐ20 காரின் அஸ்டா (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் இன்லைன் 4-சிலிண்டர் DOHC என்ஜின் பொருத்தப்ப்படுகிறது. அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 114.7 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெண்டிலேட்டட் இருக்கைகள் வெயில் காலத்திற்கு மட்டுமின்றி, மழை மற்றும் குளிர்காலத்திற்கும் ஏற்றவை ஆகும். ஏனெனில், அந்த காலங்களில் சூடான காற்றை வழங்கி பயணிகளை கதகதப்பாக வைத்துக் கொள்ளும். இருப்பினும், இவ்வாறு அனைத்து விதமான கால நிலைகளிலும் ஏற்றவையாக விளங்கும் வெண்டிலேட்டட் இருக்கைகள் விலை குறைவான கார்களில் தற்போதைக்கு முன் இருக்கைகளாக மட்டுமே வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, March 30, 2026, 7:33 [IST]
English summary
Cheapest hatchback cars with ventilated seats in india tata altroz racer and hyundai i20
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+