வெளிநாட்டு கார் கம்பெனிக்காரன்-லாம் பயப்படுறான்... டாடாவில் இருந்து மட்டும் இதுமாதிரி 4 கார் சேல்ஸில் இருக்கு!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் சற்று குறைந்துள்ளது என்றாலும், கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு உலகின் பல நாடுகளில் இன்னும் சரியான பாடில்லை. இதனால், முன்னெச்சரிக்கையாக பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள்களில் இயங்கக்கூடிய கார்களை வாங்குவது புத்திச்சாலித்தனம். அவ்வாறான மாற்று எரிபொருள்களில் சிஎன்ஜி (CNG) முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவில் பல்வேறு கார் பிராண்ட்களில் இருந்து சிஎன்ஜி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இருப்பினும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) உடன் சிஎன்ஜி கார்கள் கொஞ்சம் குறைவுதான். டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதிக எண்ணிக்கையில் ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் 5 ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி கார்களில் 4 கார் மாடல்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையது ஆகும். இருப்பினும், தற்சமயம் இந்தியாவிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி கார், நிசான் (Nissan) நிறுவனத்துடையது ஆகும்.

நிசான் மேக்னைட் சிஎன்ஜி இ.இசட்-ஷிஃப்ட் (Magnite CNG EZ-Shift): வெறும் ரூ.6.89 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து இந்த நிசான் சிஎன்ஜி கார் கிடைக்கிறது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, டீலர்ஷிப் ஷோரூம் மூலமாக மேக்னைட் காரில் சிஎன்ஜி கிட் பொருத்தி வழங்கப்படுகிறது. 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மேக்னைட் காரின் அடிப்பகுதி ஆனது தரையில் இருந்து (கிரவுண்ட் கிளியரென்ஸ்) நன்கு உயரமாக 205மிமீ உயரத்தில் உள்ளது.
டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி ஏஎம்டி (Tata Tiago iCNG AMT): டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்வதிலேயே விலை குறைவான ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி கார் இதுவாகும். ரூ.7.23 லட்சத்தில் இருந்து ரூ.8.10 லட்சம் வரையில் இந்த ஹேட்ச்பேக் (Hatchback) ரக சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உள்ளன. இந்த சிஎன்ஜி காரில் இரட்டை-சிலிண்டர் டெக்னாலஜியை டாடா நிறுவனம் தனது தொழிற்சாலையிலேயே பொருத்தி வழங்குகிறது.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி ஐசிஎன்ஜி ஏஎம்டி (Tiago NRG iCNG AMT): மேலே பார்த்த டியாகோ சிஎன்ஜி காரின் ரக்டு வெர்சன் இதுவாகும். இதற்காக இந்த காரை சுற்றிலும் கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் பொருத்தப்படுகின்றன. மேலும், இந்த காரில் 181மிமீ-இல் சற்று அதிகமான கிரவுண்ட் கிளியரென்ஸ் கிடைக்கிறது. இந்த காரும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.
டாடா டிகோர் ஐசிஎன்ஜி ஏஎம்டி (Tigor iCNG AMT): டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஏஎம்டி கியர்பாக்ஸை வழங்கும் மற்றொரு சிஎன்ஜி கார் இதுவாகும். செடான் (Sedan) ரக காரான டிகோரில் சிஎன்ஜி மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆனது ரூ.8.19 லட்சம் - ரூ.9.20 லட்சம் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. செடான் ரக கார் என்பதால், பின்பக்கத்தில் 419 லிட்டர்கள் கொள்ளளவில் நன்கு பெரிய பூட் ஸ்பேஸ் கிடைப்பதுடன், பின் இருக்கைகளில் நல்ல இடவசதியும் கிடைக்கிறது.
டாடா பன்ச் ஐசிஎன்ஜி ஏஎம்டி (Punch iCNG AMT): அளவில் மேக்னைட் சிஎன்ஜி காரை காட்டிலும் இது சிறியது. இருப்பினும், பன்ச் ஐசிஎன்ஜி ஏஎம்டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.55 லட்சம் - ரூ.10.55 லட்சம் வரையில் உள்ளன. சற்று கூடுதலான விலைக்கு காரணம், 10.25-இன்ச் தொடுத்திரை போன்ற சில அதிநவீன வசதிகள் வழங்கப்படுவது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுருக்கமாக சிஎன்ஜி எனப்படும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் விலை இந்தியாவில் குறைவு என்பது மட்டுமின்றி, சிஎன்ஜி கார்களில் அதிக மைலேஜ் (Mileage) கிடைக்கிறது. அத்தகைய சிஎன்ஜி கார்களை பெரும்பாலானோர் மேனுவல் (Manual) கியர்பாக்ஸ் உடன் வாங்கும் நிலையில், எளிதான டிரைவிங்கிற்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள கார்களில் எங்களது சாய்ஸ் எதுவென்று கேட்டால், டாடா பன்ச் ஐசிஎன்ஜி ஏஎம்டி கார் ஆகும். குறைந்த விலையில் வாங்குவதற்கு டியாகோ ஐசிஎன்ஜி ஏஎம்டி கார் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








