2017 பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ்- உலகின் பாதுகாப்பான காராக தேர்வு

Written By:

இந்தாண்டில் நடைபெற்ற உலகின் பாதுகாப்பான கார் எது என்பதற்கான தேர்வில், பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ் தேர்வாகியுள்ளது.

இந்தாண்டில் மேம்படுத்தப்பட்ட பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ் கார், பல பாதுகாப்பான அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனமான (IIHS), மத்திய ரக ஆடம்பர சிடான் கார்களில் 2017 பி.எம்.டபுள்யூ 7 சிரீஸ் மாடல் மிகவும் பாதுகாப்பான கார் என்று அறிவித்துள்ளது.

இதற்காக நடத்தப்பட்ட ஓவர்லேப் தேர்வில் ஒரு சுவற்றின் மேல் மோதப்பட்ட இந்த காரின் முன்பகுதி உருகுலைந்து போனது.

ஆனால், கார் மோதிய பிறகு உள்கட்டமைப்பில் இடம்பெற்றிருந்த ஏர்-பேக் அனைத்தும் துரிதமாக வெளிவந்து பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிசெய்தது.

ஏர்-பேக் விரிவடையும் தருணத்தில் இருக்கைக்கான பெல்ட்டும் உறுதியாக இருந்தது. இதனால் இருக்கையில் இருந்திருந்தால், வயிற்றில் காயங்கள் ஏற்படாதவாறு பெல்டு காப்பாற்றிருக்கும் என்று தெரிந்துக்கொள்ளப்பட்டது.

2016ல் பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ் காருக்காக நடத்தப்பட்ட ஓவர்லேப் தேர்வுடன் இது ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

அதில் காலை வைக்கும் பகுதி 12 அகலமும், ஸ்டீயரிங் பிடிக்கும் இடத்தில் 3 அகலமும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதேபோன்று பெரும் விபத்து நடந்தால், இடப்பகுதியில் கால்வைக்கும் இடத்தில் சிறிய காயங்கள் ஏற்பட வாய்பிருக்கலாம் என ஆய்வாளர்கள் இந்த ஓவர் லேப் தேர்வை வைத்து முடிவுகளை வெளியிட்டனர்.

புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது போன்று சுவற்றில் பெரும் சத்தத்துடன் மோதிய காரில் முன்பகுதி, மேற்கூரை பகுதி மற்றும் தலையை சாய்க்கும் இடங்களில் எல்லாம் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.

காரில் உள்ள பாதுகாப்பை வழங்கும் உபகரணங்கள், அவசர காலத்தை உணர்ந்து திறம்பட செயல்பட்டதால் ஆபத்துகள் தடுக்கப்பட்டு, பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வின் போது ஐ.ஐ.ஹெச்.எஸ் ஆய்வாளர்களை ஈர்த்த இந்த காரின் முன்பின் இருந்த பல பாதுகாப்பு அம்சங்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதை அடுத்து ஐந்திற்கு ஐந்து மதிப்பெண்கள் கொடுத்தனர்.

இதன் மூலம் 2017 பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ் கார் உலகின் பாதுகாப்பான பயணத்தை வழங்கக்கூடிய கார் என்ற அடையாளத்தை பெற்றுள்ளது.

2016ம் ஆண்டு இதே ஐ.ஐ.ஹெச்.எஸ் நிறுவனத்தின் ஓவர்லேப் சோதனையில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பென்ஸ் இ கிளாஸ் மாடல் கார் உலகின் பாதுகாப்பான காராக தேர்வானது.

English summary
The redesigned BMW 5 Series provides better protection in a small overlap front crash compared to the previous generation of the luxury car.
Please Wait while comments are loading...

Latest Photos