ரோஸ்ல்-ராய்ஸ் டான் ஃபேர்: தாமிரப் பட்டையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சொகுசுக் கார்

Written By:

உலகில் ஆடம்பர கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள ரோல்ஸ்-ராய்ஸ் தனது டான் மேஃபார் பதிப்பில் புதிய காரை வெளியிட்டுள்ளது.

ஆடம்பரத்திற்கும் தனத்துவமான படைப்புகளுக்கும் பெயர் பெற்ற ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம், இந்த புதிய காரில் பல புதிய தொழில்நுட்பங்களும் உள்ளன

85 வருடமாக ரோல்ஸ்-ராய்ஸின் டீலர்ஷிப்பை பெற்று வரும் ஹெ.ஆர்.ஓவன் நிறுவனம் மூலம் தான் இந்த டான் மேஃபார் மாடல் விற்பனைக்கு வருகிறது.

வெளியாடவுடனே ஆட்டோமொபைல் துறையில் வைரலாகியுள்ள டான் மேஃபிளார் காரில் கவனிக்கத்தக்க பல முக்கிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

தாமிரத்தால் செய்யப்பட்ட டாஷ் போர்ட்டை பெற்ற உலகின் முதல் கார் என்ற பெருமையை பெற்றள்ளது இந்த கார். மேலும் உள்கட்டமைப்பிலும் பல தனிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

உள்ளக்கட்டமைப்பு தாமிரத்தால் செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றார் போன்று ஸ்பீக்கருக்கான தோற்றம் மற்றும் இருக்கைக்கான புல்லட்கள் அனைத்தும் வென்கலத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இயங்கும் ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தான் இந்த புதிய டான் மேஃபேர் காரை வடிவமைத்துள்ளது.

லண்டனின் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவன பிராண்ட் இயக்குநரான கிளாஸ் ஆண்டர்சன் இந்த புதிய மாடல் காரை லண்டனில் வரவேற்பதில் மகிழிச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 85 வருடங்களாக ரோல்ஸ் -ராய்ஸ் மற்றும் ஹெ.ஆர். ஓவன்ஸ் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருவதை கொண்டாடும் விதமாக இந்த கார் வெளியிடப்பட்டுள்ளதாக
கிளாஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்

English summary
Rolls-Royce has revealed a one off Dawn Mayfair Edition to celebrate the 85 years of its H.R. Owen dealership. The car gets world's first copper dashboard.
Please Wait while comments are loading...

Latest Photos