புதிய டாடா ஹெக்ஸா கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய டாடா ஹெக்ஸா கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாடா ஹெக்ஸா கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா ஆரியா காருக்கு மாற்றாக இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டாடா ஹெக்ஸா கார் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி ஆகிய 3 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டாடா ஹெக்ஸா காரின் எக்ஸ்இ வேரியண்ட்டில் சற்று குறைவான சக்தியை வெளிப்படுத்தும் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

அதேநேரத்தில், எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி வேரியண்ட்டுகளில் அதிக சக்தி கொண்ட எஞ்சின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டுகள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.டாப் வேரியண்ட்டாக வந்திருக்கும் எக்ஸ்டி மாடலில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் வந்துள்ளது. மொத்தமாக டாடா ஹெக்ஸா கார் 6 விதமான தேர்வுகளில் கிடைக்கும்.

டாடா ஹெக்ஸா காரில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மாடலிலும், 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியது என இரு மாடல்களில் வந்துள்ளது.

4 வீல் டிரைவ் மாடலில் போர்க்-வார்னர் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆட்டோ, கம்போர்ட், டைனமிக் மற்றும் ஆஃப்ரோடு ஆகிய 4 விதமான டிரைவிங் மோடுகளில் எஞ்சின் இயக்கத்தையும், தொழில்நுட்ப வசதிகளையும் மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.

டாடா ஹெக்ஸா காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பெரிய க்ரில் அமைப்பு, க்ரோம் பட்டை அலங்காரம், அகலமான ஏர்டேம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்கு அறையுடன் சேர்ந்தே இருக்கிறது. கரடுமுரடான சாலைகளை எதிர்கொள்வதற்காக முன்புற பம்பருக்கு கீழே ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டாடா ஹெக்ஸா கார் 16 இன்ச் ஸ்டீல் வீல்கள் மற்றும் 19 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்படுகின்றன. பின்புறத்தில் மிக கனமான க்ரோம் சட்டத்திற்கு இருபுறத்திலும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் இரட்டைக் குழல் சைலென்சர்கள் காருக்கு மிக வலிமையான தோற்றத்தை தருகின்றன.

டாடா ஹெக்ஸா காரில் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் கனெக்ட்நெக்ஸ்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், வாய்மொழி உத்தரவு மூலமாக கட்டுப்படுத்தும் வசதிகள் உள்ளன. இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.

டாடா ஹெக்ஸா காரில் 6 ஏர்பேக்குகள், இபிடி.,நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதிக நிலைத்தன்மையை வழங்கும் இஎஸ்பி நுட்பம், மலைச்சாலைகளில் பயன்படும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல், அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

விலை விபரம்

எக்ஸ்இ: ரூ.11.99 லட்சம்
எக்ஸ்எம்: ரூ.13.85 லட்சம்
எக்ஸ்எம்[ஆட்டோ]: ரூ.15.05 லட்சம்
எக்ஸ்டி: ரூ.16.20 லட்சம்
எக்ஸ்டி ஆட்டோமேட்டிக்: ரூ.17.40 லட்சம்
எக்ஸ்டி(4x4): ரூ.17.49 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

புதிய டாடா ஹெக்ஸா காரின் படங்கள்!

டாடா ஹெக்ஸா காரின் டெஸ்ட் டிரைவின்போது எமது புகைப்பட கலைஞர் அபிஜித் எடுத்த அற்புதமான படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Tata Hexa launched in India. The Tata Hexa launch adds a new full-size flagship SUV for the Tata range in India.
Please Wait while comments are loading...

Latest Photos