டாடா ஸினான் யோதா பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

Written By:

புதிய டாடா ஸினான் யோதா பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களுக்கான விளம்பர தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்த புதிய பிக்கப் டிரக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.

இந்த புதிய பிக்கப் டிரக்கின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

புதிய டாடா ஸினான் யோதா பிக்கப் டிரக் ஒற்றை இருக்கை வரிசை[சிங்கிள் கேபின்] மற்றும் இரண்டு இருக்கை வரிசை [டபுள் கேபின்]கொண்ட மாடல்களில் கிடைக்கும். வர்த்தக மார்க்கெட்டில் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் டாடா ஸினான் யோதா பிக்கப் டிரக் வந்துள்ளது.

புதிய டாடா ஸினான் யோதா பிக்கப் டிரக்கில் 3.0 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-3 மாடல் 71 பிஎச்பி பவரையும், 223 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பிஎஸ்-4 மாடலின் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பிக்கப் டிரக் 4 வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் மாடல்களில் கிடைக்கும்.

ஒற்றை கேபின் கொண்ட மாடலில் அதிகபட்சமாக 1,250 கிலோ பாரத்தை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாரத்தை எளிதாக தாங்கிச் செல்வதற்காக லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 5 பட்டைகளும், பின்புறத்தில் 9 பட்டைகள் கொண்ட லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உள்ளது.

மேலும், இந்த பிக்கப் டிரக்கில் 16 அங்குல டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பிக்கப் டிரக் 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருப்பதால் எந்த மோசமான சாலைகளிலும் எளிதாக செலுத்த முடியும். இந்த பிக்கப் டிரக்கில் மிக வலுவான ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டாடா ஸினான் யோதா சிங்கிள் கேபின் மாடலில் பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ரூ.6.05 லட்சம் விலையிலும், பிஎஸ்-4 மாடல் ரூ.6.19 லட்சம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 

இந்த புதிய பிக்கப் டிரக்கிற்கு 3 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிலோமீட்டர் தூரத்துக்கான ஆண்டு பராமரிப்பு திட்டமும் இந்த பிக்கப் டிரக்கிற்கு வழங்கப்படுகிறது. மேலும், 3 ஆண்டுகள் அல்லது 3,00,000 கிமீ தூரத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Tata Xenon Yodha pickup truck has been launched in India and is available in both single and double cab options.
Please Wait while comments are loading...

Latest Photos