ஃபார்ச்சூனர், இன்னோவா கிரெஸ்டா கார்களின் விலையை உயர்த்தியது டொயோட்டா - புதிய விலைப் பட்டியல்..!

Written By:

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் அதன் சிறந்த விற்பனையாகும் மாடல்களான ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரெஸ்டா கார்களில் விலையை 2% அளவுக்கு உயர்த்தியுள்ளது.

உதிரிபாங்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த கார்களின் விலை உயர்த்தப்படுவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் விலை 2 சதவீதமும், இன்னோவா கிரெஸ்டா மல்டி பர்பஸ் வெஹிகிளின் விலை 1% சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்னோவா கிரெஸ்டா கார் தற்போது ரூ.13.72 லட்சம் முதல் ரூ.20.93 லட்சம் வரையிலான விலையில் கிடைத்து வருகிறது.

அறிவிக்கப்பட்டுள்ள 1% விலை ஏற்றத்தின்படி இன்னோவா கிரெஸ்டா காரின் விலை ரூ.13,000 முதல் ரூ.20,000 வரையில் கூடுதலாக இருக்கும்.

தற்போது ஃபார்ச்சூனர் கார் ரூ.25.92 லட்சம் முதல் ரூ.31.12 லட்சம் வரையிலான விலையில் கிடைத்து வருகிறது.

2% விலை ஏற்றத்தின் காரணமாக ஃபார்ச்சூனர் காரின் விலை ரூ.90,000 வரையில் கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தனது கார் மாடல்களின் விலையை டொயோட்டா நிறுவனம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஜனவரியில் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு என்ற காரணத்தினால் டொயோட்டா நிறுவனம் தனது அனைத்து மாடல்களின் விலையையும் 3% உயர்த்தியது.

ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரெஸ்டா கார்களின் விலையைத்தவிர இந்நிறுவனத்தின் இதர மாடல்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ரூ.5.39 லட்சம் விலை கொண்ட லிவா ஹேட்ச்பேக் கார் முதல் ரூ.1.34 கோடி விலை கொண்ட லேண்ட் குரூசர் 200 மாடல் வரை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் எடியாஸ் சீரீஸ், கொரொல்லா செடன் மற்றும் பிரீமியம் செடனான கேம்ரி உள்ளிட்டவை பிரபல மாடல்களாக விளங்குகின்றன.

இந்த விலை ஏற்றம் தொடர்பாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணைத் தலைவர் என்.ராஜா கூறியதாவது.

"உற்பத்தி செலவீனம் அதிகரிப்பால் டொயோட்டா நிறுவனம் கடுமையான சவாலை சந்தித்து வருகிறது குறிப்பாக உலோகங்களின் விலை சமீபமாக அதிகரித்துள்ளது"

"எனவே தான் ஃபார்ச்சூனர் காரின் விலையில் 2 சதவீதமும், இன்னோவா கிரெஸ்டா காரின் விலையில் 1 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்த புதிய விலை ஏற்றம் நடப்பு மே மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னோவா கிரெஸ்டா காரானது ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் இஞ்சின்களில் கிடைக்கிறது.

கிரெஸ்டா காரின் 2.4 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 147.51 பிஹச்பி ஆற்றலையும், 343 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

இதே போல, கிரெஸ்டா காரின் 2.8 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 171.65 பிஹச்பி ஆற்றலையும், 360 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

டொயோடா இன்னோவா கிரெஸ்டா காரின் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 163.60 பிஹச்பி ஆற்றலையும், 245 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

ஃபார்ச்சூனர் காரானது ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது.

இதன் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.8 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 174.33 பிஹச்பி ஆற்றலையும், 420 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

இதே போல ஃபார்ச்சூனர் காரின் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 163.60 பிஹச்பி ஆற்றலையும், 245 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

ஃபார்ச்சூனர் காரின் டீசல் மற்றும் பெட்ரோல் இஞ்சின்கள் இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆஃப்ஷனலாக கிடைக்கிறது.

English summary
Read in Tamil about Toyota hikes innova, fortuner car prices upto 2% in india.
Please Wait while comments are loading...

Latest Photos